மனச்சோர்வுக்கு உண்மையில் மருந்துகள் தீர்வு அளிக்குமா?

மனச்சோர்வு என்பது ‘மகிழ்ச்சியான ஹார்மோன்’ என்று அழைக்கப்படும் ‘செரோடோன்’ நம் உடலில் குறைந்த அளவுகளில் இருப்பதால் ஏற்படவில்லை என்பதைக் காட்டும் ஓர் ஆய்வு, மிகவும் பரவலாகப் பகிரப்படும் மருத்துவக் கட்டுரைகளில் ஒன்றாக தற்போது மாறியுள்ளது.
மனச்சோர்வு மருந்துகள் - ஆய்வு

இது மனச்சோர்வை எதிர்க்கும் மருந்துகளைப் (antidepressant drugs) குறித்து தவறான கூற்றுகள் பற்றிய விவாதத்தை எழுப்பியுள்ளது. அம்மருந்துகளில் பல நம் மூளையில் உள்ள செரோடோனின் அளவை அதிகரிக்கின்றன.

இந்த மருந்துகள் பயனுள்ளதாக இல்லை என்பதை இந்த ஆய்வு காட்டவில்லை.

ஆனால், அதற்கான பதிலாக, மனநோயை மக்கள் எவ்வாறு அணுகுகிறார்கள், அதுகுறித்து என்ன சிந்திக்கிறார்கள் என்பது பற்றிய சில உண்மையான கேள்விகளை எழுப்பியுள்ளன.

சாராவுக்கு கிட்டதட்ட 20 வயதானபோது, மனநோய்க்கான சிகிச்சைக்கு சென்றார். மருத்துவர்கள் அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்து ‘நீரிழிவு நோயாளிக்கு இன்சுலின்’ எவ்வளவு அவசியமோ, அது போன்றுதான் இதுவும் என்று கூறினார்கள். இது அவசியமானது என்றும், அவரது மூளையில் ஏதேனும் ரசாயன மாற்றம் இருந்தால் அதை சரிசெய்யும் என்றும், மேலும் வாழ்க்கை முழுவதும் அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு கூறப்பட்டது.

அவரது தாய் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். ஆகவே அவர் இதை மிகவும் கவனமாக எடுத்துக் கொண்டார்.

இந்த மருத்துகளை உட்கொள்வதால் சாரா மிகவும் மோசமாக உணர்ந்தாலும், அவர் தொடர்ந்து அதனை உட்கொண்டார். இறுதியில் தன்னை தானே கொலை செய்ய சொல்லும் அச்சுறுத்தும் குரல்களைக் கேட்டும் உணர்வுகள் ஏற்பட, எலக்ட்ரோகான்வல்சிவ் தெரபி (ECT – Electroconvulsive therapy ) கொடுக்கப்படும் அளவுக்கு அவரை இட்டுச் சென்றது.

நீரிழிவு நோயாளிக்கு இன்சுலின் தேவைப்படுவது போன்று, மனச்சோர்வுக்கான மருந்து அவருக்குத் தேவைப்பட்டது என்ற கூற்று எந்த மருத்துவச் சான்றுகளின் அடிப்படையிலும் இல்லை.

“நான் நம்பியவர்கள் எனக்கு துரோகம் செய்வது போல் உணர்ந்தேன்,” என்று அவர் கூறுகிறார்.

மருந்துகளுக்கு அவரது உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் தீவிரமானது., ஆனால் அவருக்கு ‘ரசாயன ஏற்றத்தாழ்வு’ உள்ளது என்று கூறப்பட்டது. அது அசாதாரணமான ஒன்றல்ல.

சாரா மற்றும் அவரது தாயார்
சாரா மற்றும் அவரது தாயார்

குறைந்த அளவிலான செரோடோன் மனச்சோர்வுக்கு முக்கிய காரணம் அல்ல என்று தாங்கள் நீண்ட காலமாக அறிந்திருப்பதாகவும், இந்த கட்டுரை புதிதாக எதுவும் கூறவில்லை என்றும் பல மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், பொதுமக்கள் இந்த செய்திக்கு அளித்த வழக்கத்துக்கு மாறான எதிர்வினைகள் இதை பெரிய செய்தியாக மாறியுள்ளது.

ஆனால் சிலர் மனச்சோர்வுக்கு எதிரான மருத்துகள் ரசாயன ஏற்றத்தாழ்வை சரிசெய்யும் பணியை செய்யாது என்று கூறுவது முதல், அவை முற்றிலும் வேலை செய்யாது என்பது வரையிலான கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த குழப்பத்தில், மக்கள் தங்கள் மருந்துகளை திடீரென உட்கொள்வதை நிறுத்திவிடலாம். இதன்மூலம் மருத்துகளை திடீரென கைவிடும்போது ஏற்படும் விளைவுகளை சந்திக்கும் ஆபத்தும் உள்ளது என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

அதாவது, இந்த மருந்துகளை மருத்துவ அவசரநிலைகளைத் தவிர, திடீரென நிறுத்தக்கூடாது. மேலும், அதன் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பது, திடீரென நிறுத்தப்படும் அறிகுறிகளின் விளைவுகளை தடுக்கும் என பிரிட்டனின் உடல்நலம் மற்றும் பராமரிப்புக்கான தேசிய அமைப்பு தெரிவிக்கிறது.

எலெக்ட்ரோகான்வல்சிவ் தெரபி (ECT - electroconvulsive therapy ) பெற்ற பிறகு சாராவுக்கு பேசுவதிலும், இயங்குவதிலும் சிரமங்கள் உள்ளன
எலெக்ட்ரோகான்வல்சிவ் தெரபி (ECT – electroconvulsive therapy ) சிகிச்சைப் பெற்ற பிறகு சாராவுக்கு பேசுவதிலும், இயங்குவதிலும் சிரமங்கள் உள்ளன

ஆய்வு என்ன காட்டுகிறது?

இந்த சமீபத்திய ஆய்வு, 17 ஆய்வு மாதிரிகளை ஆராய்ச்சி செய்தது. மனச்சோர்வு உள்ளவர்களின் மூளையில் செரோடோனின் வெவ்வேறு அளவுகள் இருந்தாக தெரியவில்லை.

இந்த கண்டுபிடிப்புகள் மூலம், இந்த மருந்துகள் ஒரு குறைபாட்டை சரிசெய்கிறது என்ற சாத்தியத்தை நிராகரிக்க உதவுகிறது.

“பராசிட்டமால் எடுத்துக்கொள்வது தலைவலிக்கு உதவியாக இருக்கும் என்று நம்மில் பலருக்குத் தெரியும். அதே சமயம், மூளையில் போதுமான அளவு பாராசிட்டமால் இல்லாததால் தலைவலி ஏற்படுகிறது என்று யாரும் நம்பவில்லை,” என்று டாக்டர் மைக்கேல் ப்ளூம்ஃபீல்ட் சுட்டிக்காட்டுகிறார்.

அப்படியெனில், மனச்சோர்வை எதிர்க்கும் மருத்துகள் வேலை செய்யுமா?

மனச்சோர்வுக்கு எதிரான மருந்துகள் மருந்துப்போலியை ( மனதுக்கு நம்பிக்கை அளிக்க உண்மையான மருந்துகளை போல தரப்படும் போலி மருந்துகள்) விட சற்று சிறப்பாக செயல்படுவதாக ஆய்வு கூறுகிறது. இந்த வேறுபாடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களிடையே விவாதங்கள் உள்ளன.

மனச்சோர்வை எதிர்க்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் சிலர், மனநல நெருக்கடியின் போது மருந்துகள் தங்களுக்கு உதவியது அல்லது மனச்சோர்வு அறிகுறிகளை சமாளிக்க உதவியது என்று கூறுகிறார்கள்.

மனச்சோர்வு மருந்துகள் - ஆய்வு

பிரிட்டனின் ராயல் காலேஜ் ஆஃப் சைகாட்ரிஸ்ட் என்ற கல்லூரியின் பேராசிரியர் லிண்டா காஸ்க், மனச்சோர்வுக்கான எதிர்ப்பு மருந்துகள் என்பது ‘பலரையும் விரைவாக நன்றாக உணர வைக்க உதவும் ஒன்று’ என்று கூறுகிறார். குறிப்பாக அவர்களின் நெருக்கடியான காலக்கட்டத்தில் உதவுகிறது.

ஆனால், செரோடோனின் ஆய்வு அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் ஜோனா மான்கிரிஃப், மருந்து நிறுவனங்களின் பெரும்பாலான ஆராய்ச்சிகள் குறுகிய கால ஆய்வுகள் என்று சுட்டிக்காட்டுகிறார். எனவே, முதல் சில மாதங்களுக்குப் பிறகு மக்கள் எவ்வளவு நன்றாக இருக்கிறார்கள் என்பது பற்றி அதிகம் நமக்கு தெரியவில்லை என்றார்.

“நாங்கள் அவற்றைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்வோம் என்று நீங்கள் கூற வேண்டும். மேலும் நீங்கள் அவற்றை உட்கொள்ளும் காலத்தை விட அதிகமான காலம் பரிந்துரைக்க தேவையில்லை,” இத்தகைய விஷயம் பெரும்பாலும் நடக்காது என்று பேராசிரியர் காஸ்க் ஒப்புக்கொண்டு இதனை கூறுகிறார்.

மனச்சோர்வுக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடுவதில் ஆபத்துகள் இருந்தாலும், சிலர் மனச்சோர்வு எதிர்ப்பு மருந்துகள் எடுத்துகொள்வதால் தீவிரமான பக்க விளைவுகளை அனுபவிக்கின்றனர். செரோடோனின் ஆய்வின் ஆசிரியர்கள் இதை இன்னும் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

நெஸ் (NICE) அமைப்பின்படி, தற்கொலை எண்ணங்களும் முயற்சிகளும், பாலியல் உறவில் ஈடுபாடு இல்லாமை, மனரீதியான உணர்ச்சியற்ற உணர்வு மற்றும் தூக்கமின்மை ஆகியவை இதில் அடங்கும்.

மனச்சோர்வு

பிரிட்டனின் (UK) மருத்துவர்கள் மருந்துகளை முயற்சிக்கும் முன், மனச்சோர்வு குறைந்த அளவில் உள்ளவர்களுக்கு சிகிச்சை, உடற்பயிற்சி, நினைவாற்றல் அல்லது தியானப் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்று கூறுக்கின்றனர்.

ஆய்வு எவ்வாறு பேசும்பொருளானது?

மனச்சோர்வுக்கான எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைப்பது ‘ஒரு கட்டுக்கதையின் அடிப்படையில் கட்டப்பட்டது’ என்று ஆய்வு காட்டியது என்று தவறான கூற்று ஒன்று எழுந்தது.

ஆனால், இந்த மனச்சோர்வுக்கான எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாட்டைப் பார்க்கவில்லை.

செரோடோனின் நம் மனநிலையில் ஒரு பங்கு வகிக்கிறது. ஆகவே, இதன்மூலம் குறைந்தபட்சம் குறுகிய காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக உணர முடியும்.

மனச்சோர்வு என்பது நம் மூளையில் ஒரு நோயாக இருந்ததில்லை. மாறாக அவர்களின் சுற்றுச்சூழலுக்கு எதிர்வினையாக இருப்பதாக இந்த ஆய்வு குறித்து பிறர் கூறுகின்றனர்.

“நிச்சயமாக இது இரண்டும் தான்,” என்று ஆய்வு அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் மார்க் ஹோரோவிட்ஸ் கூறுகிறார்.

உதாரணமாக, “மன அழுத்தத்திற்கான உங்கள் உணர்திறனை உங்கள் மரபியல் பாதிக்கிறது,” என்று கூறுகிறார்.

ஆனால், கடினமான சூழ்நிலைகளை கையாளுப்பவர்களுக்கு மருந்துகளை விட ‘உறவு குறித்த ஆலோசனை, நிதி ஆலோசனை அல்லது வேலைகளை மாற்றம்” ஆகியவை இன்னும் உதவலாம் .

ஆனால், , தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஜோ என்பவர் தீவிரமான மனச்சோர்வு மற்றும் மனநோய் (psychosis) இரண்டையும் அனுபவிக்கிறார். மனச்சோர்வு ‘அனைத்து சமூகப் பிரச்னைகளையும் சரிசெய்தால்’ மறைந்துவிடும் என்று அவர் கூறுகிறார்.

மனநோய் (psychosis) அவரது குடும்பத்திற்கு உள்ளது. ஆனால் பெரும்பாலும் தேர்வு காலக்கெடு போன்ற மன அழுத்த தரும் நிகழ்வுகளால் தூண்டப்படுகின்றன

மனச்சோர்வை எதிர்க்கும் மருத்துகள் உட்பட தனது வாழ்வை மாற்றிய சில சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளதாக ஜோ கூறுகிறார். அதன் பக்க விளைவுகள் சமாளிக்க கூடியதாக இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

பிபிசி செய்தியுடன் பேசிய அனைத்து வல்லுநர்களும் ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம் இதுதான் – நோயாளிகள் கூடுதல் தகவல்களைப் பெற்றிருக்க வேண்டும், சிறப்பாக விளக்க வேண்டும், அதனால் அவர்களே இந்தக் கடினமான சூழ்நிலையில் முடிவுகள் எடுக்கலாம்.

Previous Story

காசா: இஸ்ரேல்  தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 24 பேர் பலி

Next Story

'தனக்கு எதிரான தனதுரை'