மசூதிக்குள் விநாயகர் சிலை வந்த கதை

விநாயகர் சதுர்த்தியின் போது மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக ஒரு வித்தியாசமான நிகழ்வு நடப்பது வழக்கம். இந்து-முஸ்லிம் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக மகாராஷ்டிராவின் கோலாப்பூர், சாங்லி போன்ற கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியின் போது மசூதியில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும். இந்த தனித்துவமான பாரம்பரியம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்டு வருகிறது.

சாங்லி என்னும் பகுதியில் உள்ள வால்வா தாலுகாவில் இருக்கும் ஒரு கிராமம் தான் கோட்கிண்டி. இங்குள்ள ஜுஜார் சவுக்கில் உள்ள மசூதியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது, விநாயகர் சிலை பத்து நாட்களுக்கு நிறுவப்படும். 44வது முறையாக இந்த ஆண்டும் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்து - முஸ்லிம் சகோதரத்துவம், மகாராஷ்டிரா
கோட்கிண்டியின் மசூதியில் (இடது) கணபதி சிலை வைக்கப்பட்டுள்ளது. குருந்த்வாட், தேபன்பூர் மசூதியில் விநாயகர் சிலை (வலது).

இங்கு வைக்கப்படும் கணபதியை தரிசனம் செய்ய இந்துக்களும், இஸ்லாமியர்களும் அதிக அளவில் வருகின்றனர்.

மசூதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகரின் கதை 1961-இல் இருந்து தொடங்குகிறது.

இந்த ஊர் இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி கணபதியை நிறுவினர். கிராமத்தின் பிரதான இடத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. சிலையை வைத்த இளைஞர்கள் மிகவும் எளிமையான முறையில் அதேசமயம் மிகுந்த உற்சாகத்துடன் விநாயகரை நிறுவினர்.

கோட்கிண்டி கிராமத்தைச் சேர்ந்த அசோக் பாட்டீல் என்பவர் மசூதி கணபதியின் பின்னணியில் உள்ள கதையை விரிவாக விவரிக்கத் தொடங்கினார்.

மசூதிக்குள் விநாயகர் சிலை வந்தது எப்படி?

இந்து - முஸ்லிம் சகோதரத்துவம், மகாராஷ்டிரா
கோட்கிண்டியின் மசூதியில் (இடது) கணபதி சிலை

எளிமையான முறையில் விநாயகர் நிறுவப்பட்டது. விநாயகருக்கு மணிமண்டபம் கூட வைக்கவில்லை என்றார் அவர்.

“விநாயக சதுர்த்தியின் போது மழை வருவது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு இரவில் பலத்த மழை பெய்தது. மண்டபமோ, வேறு ஏற்பாடுகளோ இல்லாததால், விநாயகர் சிலை மழையில் நனைந்தது. அதை அந்த கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பார்த்தார். விநாயகர் சிலை நிறுவிய மக்களை அழைத்து ஒரு யோசனையை தெரிவித்தார்.

அதன் பிறகு அனைவரும் அங்கு கூடினர். என்ன செய்வது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. அந்த நேரத்தில் நிஜாம் பதான் மற்றும் அவரது உறவினர்கள் மழையில் நனைந்த கணபதி சிலையை அருகிலுள்ள மசூதியில் வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டனர்.

அங்கிருந்த அனைவரும் முடிவு செய்து கணபதி சிலையை மசூதியில் வைத்தனர்.

அந்த ஆண்டு மசூதியில் வைக்கப்பட்ட விநாயகரை அனைவரும் உற்சாகமாக வழிப்பட்டனர். ஆனால் அதன் பிறகு, அடுத்து வந்த ஆண்டில் கணபதி நிறுவப்படவில்லை” என்று அசோக் பாட்டீல் தெரிவித்தார்.

மூன்றாம் தலைமுறையாக தொடரும் பாரம்பரியம்

மசூதியில் கணபதி சிலை நிறுவியவர்களில் கோட்கிண்டி கிராமத்தைச் சேர்ந்த அசோக் பாட்டீலின் தந்தையும் ஒருவர். எனவே 1961-இல் நடந்த இந்த சம்பவத்தை மிக விரிவாக எங்களிடம் கூறினார்.

அவர் கூறுகையில், 1986 ஆம் ஆண்டு, கோட்கிண்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், பக்கத்து கிராமமான பவுச்சியில் கணபதி திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட கலாபத்கா நிகழ்ச்சியைக் காணச் சென்றனர். அப்போது, ​​அந்த கிராமத்தைச் சேர்ந்த இந்து, முஸ்லிம் என இரு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு இருந்தனர்.

இதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட இளைஞர்கள், நாமும் இது போன்று விநாயகர் சதுர்த்தியை கிராமத்தில் கொண்டாட வேண்டும் என்று நினைத்தார்கள்.

இதுபற்றி விவாதிக்கப்பட்டு பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்து அனைவரும் கிராமத்தில் இருந்த மசூதியில் கணபதி சிலை வைக்க ஆரம்பித்தனர்.

இந்த புதிய கணபதி மண்டலத்தின் தலைவராக எலாஹி பதான் இருந்தார்.

அந்த நேரத்தில், சுபாஷ் தோரட், அசோக் ஷெஜாவாலே, விஜய் காஷித், அர்ஜுன் கோகடே ஆகியோரும் முன்முயற்சி எடுத்து விழாவுக்கு பங்களித்தனர். 1961-ல் கணபதியை நிறுவியவர்களில் இரண்டாம் தலைமுறையினர் 1986-ல் கணபதியை நிறுவினர். இன்றைய மூன்றாம் தலைமுறையினரும் இந்த பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றனர் என்று பாட்டீல் கூறுகிறார்.

1961-ல் பாபுசாகேப் பாட்டீல், ஷியாம்ராவ் தோரட், வசந்த்ராவ் தோரட், நிஜாம் பதான், குத்புதீன் ஜமாதர், ரம்ஜான் முலானி தோண்டி பதான் ஆகியோர் கணபதி சிலையை நிறுவினர்.

1986 ஆம் ஆண்டு இலாஹி பதான், அசோக் பாட்டீல், சுபாஷ் தோரட், அசோக் ஷெஜாவாலே, விஜய் காஷித், அர்ஜுன் கோகடே ஆகியோர் இந்த நடைமுறையை பின்பற்றினர்.

மூன்றாம் தலைமுறையில் கணேஷ் தோரட், சாகர் ஷெஜாவாலே, ராகுல் கோகடே, லகான் பதான், சதானந்த்

இந்து - முஸ்லிம் சகோதரத்துவம், மகாராஷ்டிரா
,தேபன்பூர் மசூதியில் விநாயகர் சிலை

ஒரே நாளில் மொஹரம், விநாயகர் பூஜை

இதுபற்றி லகான் பதான் கூறுகையில், ​​“எங்கள் கிராமத்தில் அனைத்து சாதி, மதத்தை சேர்ந்தவர்களும் ஒன்றாக வாழ்கிறோம். எங்கள் தாத்தா நிஜாம் பதான், அதன் பின்னர் என் தந்தை என அடுத்தடுத்த தலைமுறையினர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

இப்போது நானும் பங்கேற்கிறேன். இந்து மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் பண்டிகைகளை நாங்கள் ஒன்றாகக் கொண்டாடுகிறோம். மொஹரமும் விநாயகர் சதுர்த்தியும் இரண்டு முறை ஒரே நாளில் வந்தது. அந்த நேரத்தில் பீர் (Pir) மற்றும் விநாயகரின் கூட்டு ஊர்வலம் எடுக்கப்பட்டது.

பதானும் அசோக் பாட்டீலும் நல்ல நண்பர்கள்.

அவர் கூறுகையில், “சில சமயம் விநாயகர் சதுர்த்தி காலத்தில் பெருநாள் பண்டிகை வந்தது. அப்போது முஸ்லிம் சகோதரர்கள் குர்பானி செய்யவில்லை. எங்கள் ஊரில் சங்கரர் கோவில் உள்ளது. அந்த கோயிலின் விசேஷ நாளில் முஸ்லிம் சகோதரர்கள் ஆடுகளை அறுக்க மாட்டார்கள். ஏகாதசி அன்று கூட கிராமத்தில் இறைச்சி சாப்பிடுவதில்லை.

இது காலம் காலமாக நடந்து வருகிறது. இவை அனைத்தும் எந்த நிர்பந்தமும் இல்லாமல் முழு மனதுடன் செய்யப்படுகிறது. அந்த கிராமத்தில் சகோதரத்துவம் அதிகம் உள்ளது” என்றார்.

பாட்டீலும் பதானும் விநாயகர் சதுர்த்தியின் போது ஒரு கதை சொன்னார்கள். “ஒருமுறை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலர் அந்த கிராமத்திற்கு வந்தனர். விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் என்று முஸ்லிம் சகோதரர்களிடம் கூறினார். இந்த விழா குறித்து எதிர்மறையான கருத்துகள் கூறப்பட்டன.

ஆனால், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் அவர்களிடம் தெளிவாகச் சொன்னார்கள். நாங்கள் பல வருடங்களாக இரு வேறு சமூகம் என்றாலும் சகோதரர்களைப் போல வாழ்ந்து வருகிறோம்.

இந்த விழாவின் மூலம் எங்களுக்கு ஆற்றல் கிடைக்கிறது, ‘நீங்கள் வெறுப்பை விரோதத்தை விதைக்காதீர்கள்’ என்று மரியாதையுடன் கிராமத்தை விட்டு வெளியேற வழி காட்டினார்.

முன்பு மாட்டு வண்டிகள் இருந்தன. அதனால் விநாயகப் பெருமானின் ஊர்வலம் எருது வண்டியில் கொண்டு செல்லப்பட்டது. இப்போது அதே குதூகலத்தில் டிராக்டரில் புறப்படுகிறது” என்றார் லகான் பதான்.

விநாயகர் சிலையை நீரில் கரைத்த பிறகு, கிராமம் முழுவதும் ஒன்றாக உணவு உட்கொள்வார்கள். இவ்விழாவில் ஊர் ஆண்களும் பெண்களும் கலந்து கொள்கின்றனர். விநாயகர் சிலை வைத்ததும், ஒவ்வொரு நாளும் ஒரு குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்துவர். இரு சமூகத்தைச் சேர்ந்த தம்பதிகள் ஆரத்தி எடுப்பர் என்று அசோக் பாட்டீல் கூறினார்.

“எங்கள் முந்தைய தலைமுறையால் தொடங்கப்பட்ட இந்த நடைமுறையால் கோட்கிண்டி கிராமம் ஒரு முன்மாதிரி கிராமமாக உருவெடுத்துள்ளது. கிராமத்தின் பெயரைச் சொல்வதில் பெருமைப்படுகிறேன். இரு சமூகத்தினரும் இளம் தலைமுறையினருக்கு பெரும் புகழை தேடிக் கொடுத்துள்ளனர். அதைப் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு” என்று உள்ளூர்வாசி கணேஷ் தோரட் கூறினார்.

இந்து - முஸ்லிம் சகோதரத்துவம், மகாராஷ்டிரா

பட மூலாதாரம்,YOGESH JIWAJE

படக்குறிப்பு,இது சமூகத்தில் நல்லிணக்கத்தை நிலைநாட்ட உதவுகிறது

குருந்த்வாட்டின் ஐந்து மசூதிகள்

கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள குருந்த்வாட்டில் (Kurundwad) ஐந்து மசூதிகள் உள்ளன. அவற்றில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

சன்ஸ்தான் கிராமத்தில் அனைத்து சாதி, மத மக்களும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். குடேகான் படேனால் சாஹேப் மஸ்ஜித், தேபன்பூர் மசூதி, பைரக்தார் மசூதி, ஷெல்கே மசூதி மற்றும் கார்கன்யா ஆகிய ஐந்து மசூதிகளில் விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

குருந்த்வாட்டின் கதையும் கோட்கிண்டியைப் போன்றது தான். 1982-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது மழை பெய்தது. அப்போது, ​​பள்ளிவாசல் அருகே வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை, மழையில் நனையாமல் இருக்க, மசூதிக்குள் வைத்தனர். அடுத்த ஆண்டு முதல், கிராமத்தில் உள்ள ஐந்து பள்ளிவாசல்களில் விநாயகர் சிலை வைக்க ஆரம்பித்தனர்.

உள்ளூர் பத்திரிகையாளர் ஜமீர் பதான் இதுபற்றி நிறைய பேசியுள்ளார்.

கிராமத்தில் உள்ள முதியவர்கள் இந்த நடைமுறையை துவக்கியது எங்களுக்கு பெருமை, என்றார். இந்த நடைமுறை இன்று வரை தொடர்கிறது. இதன் மூலம் சமூகத்தில் நல்லிணக்கத்தை பேணும் பணி நடைபெறுவதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பட்வர்தன் மன்னர்களின் பாரம்பரியம்

2009-ல் எங்கள் ஊரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீராஜ் என்ற இடத்தில் கலவரம் நடந்தது. அப்போது, ​​சாங்லி, கோலாப்பூரில் பல இடங்களில் இதன் தாக்கம் இருந்தது.

இருப்பினும், இந்த கிராமத்தில், இரு சமூகத்தினரும் ஒன்று கூடி, அமைதிக்கு அழைப்பு விடுத்து, தங்கள் கிராமத்தில் தடை விதிக்க மாட்டோம். அனைத்து வணிகங்களும் சீராக நடக்கும் என்றனர்.

ஒவ்வொரு வருடமும் விநாயகரின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார் ரஃபிக் தபாஸ்.

நாங்கள் மசூதியில் விநாயகரை நிறுவும் போது, ​​எங்களுக்கு ஒரு அழகான விருந்தாளி கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்கிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் குருந்த்வாட்டின் நட்பு வலுவடைந்தது. எங்கள் சகோதரத்துவத்தை முழு மாவட்டமும் புரிந்து கொள்கிறது. விநாயகரை கரைக்கும் போது நாங்கள் அனைவரும் ஒன்றாக செல்கிறோம் என்றார்.

குருந்த்வாட் மாநிலத்தின் சில பழைய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளும் இந்த திருவிழாவில் வேரூன்றியுள்ளன. கரீம் பைல்வான் சுமார் 1900 ஆம் ஆண்டின் கதையைச் சொல்கிறார். சன்ஸ்தானின் பட்வர்தன் மன்னர்கள் மொஹரம் பண்டிகைக்கு உதவியதாக அவர் சொல்கிறார்.

இந்து - முஸ்லிம் சகோதரத்துவம், மகாராஷ்டிரா

இரு சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் பண்டிகைகளை சகோதரத்துவத்துடன் கொண்டாடுகின்றனர்.

“எங்கள் கிராமத்து அரசர் பாலாசாகேப் பட்வர்தன், விநாயகப் பெருமானுடன் அமர்ந்திருப்பார். விநாயகர் ஊர்வலத்தின் போது கிராமத்திற்கு இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. சகோதரத்துவத்தை விதைத்தவர் ராஜா பட்வர்தன். அவருக்கு கிராமத்தின் மீது வலுவான பிடிப்பு உள்ளது, என்ன நடந்தாலும் நாம் அனைவரும் ஒன்றுதான் என்பார்” என்றார்.

2018, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்று ஆண்டுகளில் விநாயகர் சதுர்த்தி மற்றும் மொஹரம் ஆகியவற்றை ஒன்றாகக் கொண்டாடும் வாய்ப்பை குருந்த்வாட் பெற்றார். ஜமீர் பதானின் கூற்றுப்படி, அந்த நேரத்தில் விநாயகரின் கொழுக்கட்டையும் மற்றும் மொஹரம் சிறப்பு போலியும் ஒன்றாக விநியோகிக்கப்பட்டன.

1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குருந்தவாட்டின் பாரம்பரியம் தற்போது புதிய தலைமுறையினரால் முன்னெடுக்கப்படுகிறது.

Previous Story

சூழ்ச்சிகள் வன்முறைகள் எச்சரிக்கை!

Next Story

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஹரிணி பிரதமர்!