நஜீப்
நன்றி:08.02.2026 ஞாயிறு தினக்குரல்
இந்த என்பிபி. அரசுக்கு என்னதான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் கொடுத்தாலும் அந்தப் பெரும்பான்மை பலத்தை வைத்து ஆட்சி அதிகாரத்தை முன்னெடுப்பதற்கு பல தரப்பால் அரசுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றன.
ஈரான் ஆட்சிக்கு எதிராக அங்கு நடாத்தப்பட்ட மேற்கத்திய ஆதரவுப் போராட்டங்களைப் போல ஒரு நிலைதான் இன்று இங்கும் காணப்படுகின்றது என்று எண்ணத் தோன்றுகின்றது.
அங்கு சதிகாரர்களை தோற்கடிக்க குடிமக்கள் ஈரான் அரசுக்கு ஆதரவாக மில்லியன் கணக்கில் வீதிக்கு இறங்கிப் போராட்டம் நடாத்தி அந்த சதிகாரர்களை விரட்டியடித்ததைப்போல இங்கும் அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அமுல் படுத்த அரசு பின்வாங்கினால் சொன்னபடி நீதியையும் சட்டத்தையும் அமுல்படுத்துமாறு இங்கும் மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டங்களை நடாத்த வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இதற்கான ஏற்பாடுகளை ஆட்சியாளர்களே நெறிப்படுத்தவும் முடியும் என்பது நமது அவதானம்.





