மகிந்த விலகல்: பிரதமர் அலுவலக தகவல்

(புதிய இணைப்பு)

தன்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி கேட்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ஊடகப் பிரிவு இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முதலாம் இணைப்பு

தான் பதவி விலக தீர்மானித்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சற்று முன்னர் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே பிரதமர் தனது பதவி விலகல் குறித்து அறிவித்துள்ளார் என  தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்  விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு சில அமைச்சரவை அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பிரதமரின் பதவி விலகல் தொடர்பில் வெளிவந்த செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

பிரதமர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் மகிந்த ராஜபக்ச இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலை காரணமாக ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்காரணமாக தற்போதைய அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில் பிரதமரின் பதவி விலகல் குறித்து பல தரப்பினராலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

எனினும்,  அழுத்தங்களுக்கு பயந்து தான் ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை எனவும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தால் அந்த தரப்பினரிடத்தில் ஆட்சியைக் கையளிக்க தயார் எனவும் பிரதமர்  முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“என்னதான் மறுப்பு அறிக்கைகள் வந்தாலும் நமக்கு வருகின்ற தகவல்களின் படி ஆள் அவுட்’ என்பது உறுதி. அது தானாக கனிந்து விழுகின்ற நிலை என்று எடுத்துக் கொள்ளவும் முடியும். அண்ணனை கொடுத்து தம்பி தப்பும் முயற்ச்சி நடக்கின்றது. ஆனால் இரண்டு பேருமே விரைவில் OUT என்பதுதான் நடக்கப் போகின்றது.”

Previous Story

பிரதமர் மஹிந்த இராஜினாமா உறுதி

Next Story

நீதி நிதி மு.கா.!