மகிந்த ராஜபக்சேவை மக்கள் அடித்து கொல்லட்டும்!

மகிந்த ராஜபக்சேவை பொதுமக்கள் அடித்து கொல்லட்டும் என காத்திருந்தாரா கோத்தபாய ராஜபக்சே?

இலங்கை தலைநகர் கொழும்பில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகும் போது நிகழ்ந்த வன்முறைகளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே வேண்டும் என்றே தடுக்காமல் வேடிக்கை பார்த்தார் என்று ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதரும் ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்தவருமான உதயதுங்க வீரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை நிலவரங்கள் தொடர்பாக உதயதுங்க வீரதுங்க அளித்த பேட்டி ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டு மக்களுடன் பேசாமல் அறைக் கதவை மூடியதே ஜனாதிபதி கோத்தபாய செய்த மிகப் பெரிய தவறு.

இத்தகைய முறையில் ஒரு நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மகிந்த குடும்பத்தில் அதிருப்தி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகவில்லை. உண்மையில் மகிந்த ராஜபக்சே பதவி விலக வைக்கப்பட்டார்.

ராஜபக்சே விடுத்த வேண்டுகோளை ஏற்று மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதற்கு எமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதிருப்தியை தெரிவித்தும் இருந்தனர். கோத்தபாயவுக்கு எதிர்ப்பு எங்களது குடும்பத்தினரால் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டவர் கோத்தாபாய ராஜபக்சே.

மகிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகிய நாள் ஏற்பட்ட கலவரம் இவ்வளவு தூரத்துக்கு செல்லாமல் கோத்தாபய ராஜபக்சே நினைத்து இருந்தால் தடுத்து இருக்கலாம். கோத்தபாயவுக்கும் மகிந்தவுக்கும் மோதல் இருந்தது.

இதனால் கோத்தபாய ராஜபக்சே அமைதியாக வேடிக்கை பார்த்தார். கோத்தபாயவே காரணம் தீப்பிடிக்கும் பேருந்தை நிறுத்த முடியாதவர் எப்படி நாட்டை காப்பாற்றுவார்?

தாயாரின் கல்லறையை காப்பாற்ற முடியாத ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே நாட்டையும் எம்மையும் எப்படி பாதுகாப்பார்? மிக் வானூர்திகள் கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கு தொடர்ந்தால், என்னைவிட கோத்தாபாயவுக்கே அதிக பிரச்சினைகள் ஏற்படும்.

உண்மையில் ராஜபக்ச குடும்பத்தின் மீதான வெறுப்பு நிலையை மக்கள் மத்தியில் உருவாக்கியவர் கோத்தாபய ராஜபக்சேதான். எனக்கு ஏதேனும் நேர்ந்தால்.. ரணிலை பிரதமராக நியமித்தது மகிந்த ராஜபக்சேவுக்கு பிடிக்கவில்லை.

ஆனாலும் ரணில் விக்கிரமசிங்கேதான் தற்போதைய ஒரே தேர்வு. ஒருமுறை என்னை சிறையில் அடைக்க முயற்சித்தனர். தற்போது இப்படி நான் பேட்டி தந்ததால் என்னை தாக்கவும் முயற்சிப்பார்கள். எனக்கும் ஏதாவது நேர்ந்தால் அதற்கு கோத்தபாய ராஜபக்சேதான் பொறுப்பு. இவ்வாறு உதயதுங்க கூறினார்.

Previous Story

இலங்கைக்கு ஆதரவளிக்க மாலைதீவு தீர்மானம் !

Next Story

சாபத்தில் பங்கு பிரித்தல்!