மகிந்த கும்பலால் தாக்கப்பட்ட மொரீன் நூர் 

அலரி மாளிகைக்கு முன்னாள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, தான் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாக மொரீன் நூர்  என்ற ஒரு பெண்  தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தாக்குதல் நடத்தியவர்கள் தம்மை திட்டி கடுமையாக தாக்கியதாகவும், தாய் நாட்டிற்காகப் போராடிய தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தனக்கு கிடைத்த தங்கப் பதக்கம் போன்றது எனவும் அவர் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக காலி முகத்திடலில் அமைதியான முறையில் நடத்தப்பட்டு வந்த போராட்டம் மகிந்த ஆதரவாளர்கள் என தெரிவித்து வந்த கலக கும்பலினால் நேற்றையதினம் சீர்குலைக்கப்பட்டது.

இதன்போது குண்டர் குழுவால் கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதோடு போராட்டக் களம் யுத்தக் களமாகவே காட்சியளித்தது.

எனினும், எதிர்த்து நின்ற போராட்டக் காரர்களால் குண்டர் குழு கடுமையான தாக்குதலுக்கு இலக்கானதோடு அது பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Previous Story

கடற்படை முகாமிலிருந்து மஹிந்த தப்பினார்

Next Story

இலங்கை - 109 வீடுகள் சேதம்; துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயம்