பௌத்த விரோத சதி!

நஜீப்

நன்றி 15.11.2026  ஞாயிறு தினக்குரல் 

அண்மைக்காலமாக சில பௌத்த தேரர்கள் புத்த பெருமானின் போதனைகளுக்கு முற்றிலும் விரோதமான கருத்துக்களையும் செயல்பாடுகளையும் முன்னெடுத்து தூய பௌத்த சிந்தனைகளை சிதைத்துக் கொண்டிருப்பதை பரவலாக அவதானிக்க முடிகின்றது.

இதன் பின்னணியில் சில அரசியல் தலைவர்களும் அவர்களின் நலன்கள் சார்ந்த விடயங்களும் இருப்பதாகத் தெரிகின்றது. நாட்டிலிருக்கின்ற பிரதான பௌத்த பீடங்களுக்குப் புறம்பாக சிலர் தமது தனிப்பட்ட விருப்பங்களையும் கருத்துக்களையும் முன்வைத்து செயல்பட்டுக் கொண்டிருகின்றார்கள்.

அதற்காக பல குழுக்கள் செயல்படுகின்றன. அவர்கள் புத்த சமயத்தை ஒரு வன்முறை சமயமாக காட்ட முனைகின்றார்கள். சில தேரர்கள் நாட்டில் இருக்கின்ற நீதி சட்டம் ஒழுங்கு விதிகள் தம்மைக்கட்டுப்படுத்தாது என்றும் கூறுகின்றார்கள். அதனால் நீதி மன்றங்கள் விடுக்கின்ற கட்டளைகளுக்கு நாம் அடிபணிய மாட்டோம் என்றும் எச்சரிக்கின்றார்கள்.

இது எவ்வளவு ஆபத்தானது. சமூகத்தில் புத்த சமயத்தை பிளவுபடுத்தி-கொச்சைப்படுத்தி மக்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தும் சதியாகவே இதனைப் பார்க்க வேண்டும்.

Previous Story

குரல் தரும் குறுஞ் செய்திகள்