பெட்ரோல், டீசல் விலை ஏறுமா, இறங்குமா என்று நாம் தினமும் கவனித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால் அந்த பெட்ரோல் நம்மிடம் வந்து சேர்வது சாதாரண விஷயமில்லை.. கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு கப்பல்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து பல நாடுகளுக்கு செல்கின்றன. இப்போது அந்த கப்பல்கள் செல்லும் முக்கியமான 2 பாதைகளில்தான் பிரச்சனை உருவாகியுள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதலால் ஏற்கெனவே ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த ஹார்மூஸ் ஏன் முக்கியம் என்றால், உலக நாடுகளுக்கு செல்லும் கச்சா எண்ணெயில் பெருமளவு, இந்த பகுதி வழியாகத்தான் செல்கிறது. அந்த ரூட்டில் பிரச்சனை என்றால், எண்ணெய் கப்பல்கள் வழக்கம்போல் செல்ல முடியாது.






