பூமியை துளையிட்டு”34,000 அடி ஆழம்!” வேலையை ஆரம்பித்த சீனா!

சீனா இப்போது சத்தமே இல்லாமல் பூமிக்கு அடியில் சுமார் 32,000 அடி ஆழத்தில் துளை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்தாண்டு சீனா அமைக்கும் இரண்டாவது துளை இதுவாகும். இந்த பூமி பல மர்மங்களையும் ஆச்சரியங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. பூமி குறித்து நாம் தெரிந்து கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் நமக்கு மிகப் பெரிய வியப்பைக் கொடுப்பதாகவே இருக்கிறது.

பூமியில் இன்னும் என்னவெல்லாம் மர்மங்கள் இருக்கிறது என்பதைக் கண்டறிய ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். அதன்படி சீனா நடத்தும் ஆய்வு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

 What is the reason behind second 10000 meter deep hole by china

ஆழமான துளை:

இந்த ஆண்டு இரண்டாவது முறையாகச் சீனா பூமியில் மிக ஆழமான ஒரு துளையை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 10,000 மீட்டர், அதாவது 34,000 அடி ஆழத்தில் அவர்கள் இந்த துளையை ஏற்படுத்த உள்ளனர். அந்த ஆழத்தில் என்ன மாதிரியான இயற்கை எரிவாயு இருக்கிறது..

எந்தளவுக்கு அவை இருக்கிறது என்பது குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளச் சீனா இந்த ஆய்வை நடத்துகிறது. இதற்கான பணிகளைக் கடந்த வியாழக்கிழமை சீனா தொடங்கியுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் தான் 10,520 மீட்டர் 34,000 அடி ஆழத்தில் இந்த துளையைப் போட உள்ளனர். இதற்கு அவர்கள் ஷெண்டி சுவாங்கே 1 (Shendi Chuanke 1) என்று பெயரிட்டுள்ளனர்.

அங்கு ஆழத்தில் இருக்கும் இயற்கை எரிவாயு குறித்த தகவல்களைச் சேகரிக்கச் சீனா நேஷனல் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் இந்தப் பணிகளை ஆரம்பித்துள்ளது.

இரண்டாவது துளை:

முன்னதாக கடந்த மே மாதம் சின்ஜியாங்கில் கிட்டதட்ட இதே அளவுக்கு ஆழத்தில் சீனா துளையை அமைத்திருந்தது. இப்போது சில மாதங்கள் இடைவெளியில் மீண்டும் சீனா அதே அளவுக்கு ஆழத்தில் சீனா மீண்டும் துளையை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. அந்த முதல் துளை இயற்கை எரிவாயு தொடர்பானது என்று கூறப்பட்டாலும் கூட, உண்மையில் சீனா பூமியின் உள் கட்டமைப்பு குறித்துத் தெரிந்து கொள்ளவே இந்த ஆய்வுகளைச் செய்வதாகச் சர்வதேச வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இருப்பினும், இதை யாரும் உறுதி செய்யவில்லை. பெரிய சிக்கல்: சீனாவின் தென்கிழக்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணம் அழகிய மலைகளுக்கும் அங்குள்ள பாண்டா கரடிகளுக்கும் பெயர்போனது. இந்த இடம் சீனாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு இருப்பாகவும் இருக்கிறது. இருப்பினும், அங்கே மிகவும் கடினமான நிலப்பரப்பு இருக்கிறது.

பூமிக்கு அடியில் இருக்கும் சிக்கலான மற்றும் கடினமான இந்த நிலப்பரப்பால் அங்கே இயற்கை எரிவாயுவை எடுப்பது சவால் மிகுந்த ஒன்றாகவே இருக்கிறது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே அங்கிருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் அளவை அதிகரிக்குமாறு சீனா அரசு அந்த நிறுவனங்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வந்தது.

சீன நிறுவனங்கள் இந்தளவுக்கு ஆழத்தில் துளையை அமைத்து இயற்கை எரிவாயு சோதனையை நடத்த இந்த அழுத்தமும் ஒரு காரணமாகும். உலகின் ஆழமான துளை: அதேநேரம் இந்த 32 ஆயிரம் அடி ஆழத் துளைக்கு நீங்கள் ஷாக் ஆக வேண்டாம்.

ஏனென்றால் பூமியில் இருக்கும் ஆழமான துளை இது இல்லை. பூமியில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆழமான துளை என்பது ரஷ்யக் கோலா சூப்பர் டீப் போர்ஹோல் ஆகும். அங்கே 40,230 அடி ஆழத்தில் துளை அமைக்கப்பட்டது. 1970இல் ஆரம்பித்த இந்தப் பணி நிறைவடைய மட்டும் சுமார் 20 ஆண்டுகள் ஆனது.
\

Previous Story

மணிப்பூர்: நிர்வாண ஊர்வலம் 'கொடூர வீடியோ' 

Next Story

மணிப்பூர் வன்முறை:  தொடங்கியது எப்படி? யார் காரணம்?