நஜீப்
நன்றி 28.12.2025 ஞாயிறு தினக்குரல்
டிட்வா புயல் நம்மைப் புரட்டிப் போட்டிருக்கின்றது. பக்கத்து வீட்டுக்காரன் அல்லது மூத்த அண்ணன் என்ற வகையில் இந்தியா தனது பொறுப்பையும் கடமையையும் மிகவும் சிறப்பாக நிறைவேற்றி இருக்கின்றது.
இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. நாட்டிலுள்ள எதிரணிகள் இந்தளவுக்கு இந்தியாவின் உதவியை எதிர்பார்த்திருக்க மாட்டது.
அது அவர்களுக்கு எரிச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. சிலர் அடக்கி வாசித்தாலும் பலர் இந்தியாவின் உதவிளை அப்பட்டமாக எதிர்க்கின்றார்கள்.
என்பிபி. வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்தபோது இந்தியா இலங்கை உறவு இந்தளவு நெருக்கமாக இருக்கும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
எங்கே அனுர சீனாவுடன் நெருங்கிவிடுவாரோ என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோடியும் அனுராவும் மிகவும் லாவகமாக இங்கு காய் நகர்த்திக் கொண்டு வருகின்றார்கள்.
அதனால்தான் டிட்வா நெருக்கடியில் இந்தளவு ஒத்துழைப்பு.! அதே நேரம் சீனாவும் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் என்று சொல்ல முடியாது!





