-நஜீப்-
நன்றி 24.08.2025 ஞாயிறு தினக்குரல்
திருக்குறலுக்குப் பண்டிதார்கள் விளக்கம் சொல்வதை நாம் கேட்டிருக்கின்றோம். அதுபோல அரசியல்வாதிகள் தப்பிய வார்த்தைகளுக்குப் புது விளக்கம் சொல்வது வழக்கம்.
அரசுக்கு எதிரான கடும் விமர்சனங்கள் பண்ணி மூக்குடைந்த பேராசிரியர் அர்ஷ த சில்வா இப்போது புது அர்த்தம் சொல்கின்றார்.
அரசு ட்ரம்புடன் பேசாது பொடுபோக்கில் இருக்கின்றது. இதனால் ட்ரம்ப்வரி (44) நாற்பத்தி நான்கு சதவீதமாகும் என்றார். முன்னர் அரசு வாகனங்களை இறைக்குமதி செய்வது வெற்றியளிக்காது என்றார். அப்படி நடக்கவில்லை.
அரசு ட்ரம்புடன் பேசி வரியை கனிசமாக குறைத்துக் கொண்டது. இப்போது இந்திய வரி அதிகரித்திருப்பதற்கு எவரும் சிரிக்காதீர்கள் எனப்பேசுகின்றார் அர்ஷ.
இந்தியாவைப்பார்த்து யார் சிரித்தது என்ற கேள்விகளுடன் நாட்டில் அர்ஷ ஒரு துரோகி எனக்கடும் விமர்சனங்கள்.
அர்ஷவுக்கு துரோகி விருது கிடைத்ததில் ஹெப்பியாக இருப்பது தலைவர் சஜித்தானாம்!