புதிய வகை உணவு!

நஜீப்

மஹிந்த அமரவீர ஹம்பாந்தோட்டையில் அரசியல் செய்பவர். கடந்த பொதுத் தேர்தலில் இவர் மைத்திரியின் சு.கட்சி சார்பில் தேர்தலுக்கு நின்று ராஜபக்ஸாக்களின் வெட்டுக் கொத்துக்களுக்கு மத்தியில் மிகவும் சிரமப்பட்டு கரை சேர்ந்தார்.

இன்று அவர் சு.கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறி அமைச்சுப் பதவியை ஏற்றிருக்கின்றார். தான் அமைச்சை ஏற்கும் போது களஞ்சியத்தில் 65000 மெற்றிக் தொன் யூரிய உரம் இருக்கின்றது என்று நினைத்தேன். பின்னர் போய்ப் பார்த்த போதுதான் தெரிய வந்தது ஒரு தூள் கூடக் களஞ்சியத்தில் இல்லை. என்ன வேடிக்கை இது.?

அடுத்து வருகின்ற பட்டினியின் போது மக்கள் பாம்பு பல்லி கரப்பத்தான் பூச்சுகளையும் தேடி உண்ண வேண்டி வரும் என்றும் கூறி இருந்தார். அமைச்சருக்கு நாம் ஒரு விடயத்தை ஞாபகப்படுத்துகின்றோம். அவை கூட ஓரிரு நாட்களுக்குப் போதாமல்தான் இருக்கும்.

கொரியா சீனா ஜப்பான் போன்ற நாடுகளைப் போன்று நமது நாட்டில் இந்தப் பண்ணைகள் கிடையாது. இதனை அமரவீர அறிவாரோ என்னவோ? மேற்சொன்ன வசதிபடைத்த நாடுகளில் மக்கள் இதனை உண்ணும் போது, நம்ம மக்களும் சாப்பிட்டலாம் என்பதுதான் அமைச்சர் எதிர்பார்ப்புப் போலும்.

நன்றி:12.06.2022 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிக்கும்

Next Story

அரசாங்கத்தை மாற்றாமல் தீர்வு இல்லை- -மைத்திரி திட்டவட்டம்