புதிய சூத்திரதாரி முஜீபராம்!

நஜீப்

நன்றி: 12.04.2026 ஞாயிறு தினக்குரல்

ராஜபக்ஸ காலத்தில் சரத் வீரசேக்கர பாதுகாப்புத் துறையில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். தனது காலத்தில் ஈஸ்டர் குற்றவாளிகளை பிடித்து சிறையில் தள்ளி இருக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவர்.

ஒரு புத்தகத்தை வெளியிட்டு அவரது சகா கம்மன்பில ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளியை அறிமுகம் செய்திருந்தார். இதில் ஒன்றும்  புதிய தகவல்கள் ஏதும் கிடையாது. தாக்குதலை நடாத்தியது சஹ்ரான் அணிதான்.

அவர்களில் டசன் கணக்கானவர்களுக்கு கோட்டா அதிகாரத்தில் இருந்த காலத்தில் சம்பளமும் வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தக் கதைகள் அப்படி இருக்க சரத் வீரசேக்கர தற்போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தனது புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தி வருகின்றார்.

அதன்படி சஜித் அணி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்தான் அந்த சூத்திரதாரியாம்.!

நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பேசப்பட்ட போது சஜித் மௌனித்து நின்றது கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

Previous Story

ඊශ්‍රායලය ඉගෙනගත් පාඩම් 5ක් ගැනත් කියයි

Next Story

ජනාධිපති විශේෂ කොමිසම බෝම්බයක් වී පුපුරයි! සියල්ල සලිත කළ ඇත්ත කතාව මෙන්න.!