புதின் உலகை ஆளுவதை யாராலும் தடுக்க முடியாது;பாபா வாங்கா கணிப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷியாவை யாராலும் தடுக்க முடியாது என்றும், அதிபர் புதின்  (Vladimir Putin)உலகை ஆளுவார் எனவும்  கண் தெரியாத பாபா வாங்காவின் (Baba Wanga)  கணிப்பு தற்போது வைரலாகி உள்ளது.

பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா (Baba Wanga) . கண் தெரியாத இவர்  1996 ஆம் ஆண்டு  தனது 85 வயதில்  காலமானார்.   அங்கு, பாபா வாங்கா பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கப்படுகிறார். பாபா வாங்கா  (Baba Wanga)  50 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். அவர் கூறியதில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவை பலித்தும் உள்ளன, நடந்தும் உள்ளன.

அவரது கணிப்பில் அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். அதேபோன்று அந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது.

அத்துடன் அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என பாபா வாங்கா  (Baba Wanga)  கணித்தார். அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார். அதன் பின்னர், 2016-ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும் எனவும்  பாபா வாங்கா (Baba Wanga) கணித்தார்.

இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என்றும் பாபா வாங்கா (Baba Wanga) கணித்தார், அதுவும் நடந்தது. இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பு பரவலாக பேசப்படுகின்றது. எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும் பாபாவை (Baba Wanga) பின்பற்றுவோர் அவரது கணிப்பை மிகவும்  நம்புகின்றனர்.

இந்த நிலையில் தற்போது, ரஷ்யா உக்ரைன் மீது பயங்கர தாக்குதலை நடத்தியதை அடுத்து, பாபா வாங்காவின் (Baba Wanga)  கணிப்பு ஒன்று மீண்டும் வைரலாகியுள்ளது. பாபா வங்கா (Baba Wanga) கணிப்பு குறித்து  எழுத்தாளர் வாலண்டைன் சிடோரோவிடம் கூறுகையில்,

அனைத்தும் கரைந்துவிடும், பனிக்கட்டி போல, ஒன்று மட்டும் தீண்டப்படாமல் இருக்கும் – விளாடிமிரின் (Vladimir Putin) மகிமை, ரஷ்யாவின் மகிமை. அதனை (ரஷ்யாவை) யாராலும் தடுக்க முடியாது, ரஷ்யா உலகின் அதிபதி ஆகிவிடும்  என பாபா வாங்கா (Baba Wanga) கூறிய    கணிப்பு தற்போது  வைரலாகி வருகிறது.

Previous Story

கெஹெலிய மின் கட்டணம்!

Next Story

யாரிந்தப் புதின்