புதினை சந்தித்த 8 வயது சிறுமி – ஒரு சுவாரஸ்யம்

Russian President Vladimir Putin meets with Raisat Akipova, an 8-year-old girl from Derbent, who failed to see the head of state during his working trip to the Republic of Dagestan, where he also talked with local residents, at the Kremlin in Moscow, Russia July 4, 2023. Sputnik/Alexander Kazakov/Kremlin via REUTERS

வெளி உலகில் தன்னைக் கடுமையானவராக காட்டிக் கொள்ளும் ரஷ்ய அதிபர் புதின், சமீபத்தில் ரஷ்யாவில் சிறுமி ஒருவரை அழைத்து விருந்தளித்த நிகழ்வு பேசுபொருளாகி இருக்கிறது.

ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் தாகெஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார். அப்ப யணத்தின்போது புதின் பங்கேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அவரை பார்க்க 8 வயது சிறுமியும் அங்கு வந்திருந்தார்.

ஆனால், புதினை அவரால் சந்திக்க முடியவில்லை. இதனை தாங்கிக்கொள்ள முடியாத அந்தச் சிறுமி கண்ணீர் விட்டு அழுகிறார். இதனைத் தொடர்ந்து அந்த வீடியோ வைரலாகியது.

இந்த வீடியோ புதினின் பார்வைக்குச் செல்கிறது. இதனைத் தொடர்ந்து அச்சிறுமியையும், அவரது பெற்றோரையும் மாஸ்கோவுக்கு அழைப்பு விடுத்தார் புதின். அதன்படி இந்த வாரம் புதினை சந்தித்து அச்சிறுமி வாழ்த்து பெற்றார்.

அச்சிறுமியை நேரில் சந்தித்து ரஷ்ய அதிபர் புதின் ஆச்சரியத்தை அளித்திருக்கிறார். அச்சிறுமியை அதிபர் மாளிகைக்கு அழைத்து புதின் நாற்காலியில் அமர வைத்தும் உரையாடி இருக்கிறார். இது தொடர்பான வீடியோவை ரஷ்ய அரசு வெளியிட்டுள்ளது.

புதினை மொஸ்கோவில் சந்தித்த அந்த சிறுமி, ரஸ்யா சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேந்தவள். உக்ரைன் யுத்தத்தில் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் நாட்டுக்காகக் களத்தில் இறங்கி இருக்கின்றார்கள்.

அவளை மொஸ்கோவுக்கு அழைத்து விருந்து கொடுத்த ரஸ்யா அதிபர் புதின் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, எங்கள் பிரதேசத்துக்கு அபிவிருத்தி என்று அவள் கேட்டிருக்கின்றாள்.

உடனே நிதி அமைச்சரை அதே இடத்தில் வைத்து தொலைபேசியில் புதின் தொடர்பு கொண்டு கதையைச் சொல்லி, பல ஆயிரம் கோடி ரூபிள் பணத்தை உடனே அந்தப் பிரதேசத்துக்கு ஒதுக்கியும் கொடுத்திருக்கின்றார். இந்தச் செய்தி இன்று உலக அளவில் வைரலாகி வருகின்றது.

Previous Story

காதலுக்காக சட்டவிரோதமாக எல்லையை தாண்டி, சிறையில் தவிக்கும் பாகிஸ்தான் பெண்!

Next Story

தமிழ் மொழியிலான செவ்விக்கு ஜனாதிபதி ரணிலுக்கு பகிரங்க அழைப்பு!