பீல்ட் மார்ஷல் பற்றிய கிசு கிசு!

-நஜீப்-

நன்றி ஞாயிறு தினக்குரல் 27.07.2025

இன்று சமூக ஊடகங்களில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்க பற்றி பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. ஏதோ ஒருவகையில் அவர் அளுமைமிக்க ஒரு மனிதர்தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

அதனால்தான் ஒரு சந்தர்ப்பத்தில் ராஜபக்ஸாக்களுக்கு எதிரான பொது ஜனாதிபதி வேட்பாளராயாவும் மனிதன் களத்துக்கு வந்தார். இவருக்கு விரைவில் என்பிபி.

அரசியல் உயர் பதவி ஒன்று கிடைக்க இருக்கின்றது என்று அரசுக்கு விசுவாசமான சமூக ஊடகங்களில் கருத்துப் பரிமாறி வருகின்றது. ஆனால் இந்த பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேக்க பிரேக் இல்லாத வண்டி போல ஒரு மனிதர்.

பதவி கிடைத்தாலும் அவர் அதை எங்கையாவது சாத்தி விடவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதும் ஆட்சியாளருக்கும் தெரியும்.

ஒரு முறை ராஜபக்ஸாக்கள் இவரை சட்டவிரோதமாக இழுத்துக் கொண்டு போய் சிறையில் தள்ளி தொந்தரவு செய்து மூக்குடைபட்டிருந்தனர். பதவி கொடுக்கப்பட்டால் துனிச்சலுடன் காரியம் சாதிக்கக் கூடியவரும்தான் பீல்ட்மார்ஷல்.

Previous Story

சவுதி சாம்ராஜ்யமான கதை

Next Story

ගමක් වැළපුව පොලිසියේ මුව දඩයම