பீரிக்சில்  பிரான்சுக்கும் வாய்ப்பு!

-யூசுப் என் யூனுஸ்-

தற்போது அமெரிக்க தலைமையிலான அணிகள் சர்வதேச அரங்கில் பின்னடைந்து வருவதால் ஐரோப்பிய நாடுகளில் அதுவும் உக்ரைன் போர் காரணமாக அங்கு பல நெருக்கடிகள் தோன்றி இருக்கின்றன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் பெரும் பொருளாதார நெருக்கடி நிலமைகளும்  விலை ஏற்றங்களும் ஏற்பட்டு வருகின்றது.

இதனால் தனக்கும் பீரிக்ஸ் அமைப்பில் ஓர் இடம் தாருங்கள் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரான்ஸ் கேட்டிருந்தது. இப்போது அதற்கு பீரிக்ஸ் அமைப்பில் கலந்து கொள்வதற்கான பச்சைக் கொடி காட்டப்பட்டிருக்கின்றது. ஆனால் பிரான்ஸ் இப்போதைக்கு ஒரு பார்வையாளராக மட்டும் வந்து கலந்து கொள்ள முடியும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருக்கின்றது.

BRICS Expansion: Gauging Kazakhstan's Potential | Geopolitical Monitor

அதனை பிரான்ஸ் ஏற்றுக் கொண்டும் இருக்கின்றது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருக்கின்ற பிரான்ஸ் இப்படி பல்டி அடித்திருப்பது அந்தக் கூட்டில் இருக்கின்ற நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு அவமானமாக சிலர் பார்க்கின்றார்கள்.

தமக்கு பொருளாதாரத் தடையை வித்திருக்கின்ற இந்த நாட்டை உள்வாங்கிக் கொள்வதில் பீரிக்ஸ் நாடுகள் மத்தியில் ஒரு விமர்சனமும் பிரான்ஸ் வருகைக்கு எதிராக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தென் ஆபிரிக்காவில் மாநாடு நடக்கின்ற போது பிரான்ஸ் பார்வையாளராக அங்கு நிற்கும்.

நன்றி: 25.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

புதிதாக வரும் அமைச்சர்கள்!

Next Story

'வாக்னர்' கிளர்ச்சி : மாஸ்கோவை வெளியேறினாரா புதின்?