‘பிஷ்சு பூசா’ அணைக்குழு!

-நஜீப்-

மிகப் பெரிய குற்றவாளிகள் பலருக்கு அபேரத்தன (பிஷ்சு பூசா) என்பவர் தலைமையிலான  ஆணைக்குழு பல சலுகைகளை வழங்கி இருக்கின்றது.  குற்றவாளி என்று தெளிவாக கண்டறியப்பட்டவர்களை அந்தக் குற்றத்தில் இருந்த விடுவிப்புச் செய்வது.

அத்துடன் இது தொடர்பான விசாரணைகளை மேற் கொண்டவர்களைத் தண்டிக்கும் விதமாக சிபார்சுகள். மற்றும் குற்றவாளிகளை விசாரணை செய்த நீதிபதிகளுக்குத் தண்டனை என்று பல அதிகாரிகளுக்கு எதிரான தண்டனை.

என்று ஒரு நீண்ட பட்டியலை வாசித்தார் அணுரகுமார திசாநாயக்க. அத்துடன் குற்வாளிகளாக இனம் காணபப்பட்ட பலருக்க நஷ்டஈடு வழங்குவது என்றெல்லாம் இந்த ஆணைக்குழு சிபார்சு செய்திருந்தது. இந்த அபேரத்தன ஆணைக்குழு முறைப்பாடுகளைச் செய்த பலருக்கு பிரசா உரிமையை இரத்துச் செய்ய வேண்டும் என்றும் சிபார்சும் செய்திருந்தது.

இதில் எனது பெயர், குறிப்பாக இன்று ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் கூட குற்றவாளி என்று இந்த அபேரத்தன (பிஷ்சு பூசா) ஆணைக்குழு சிபார்சு செய்திருந்தது. என்ன வேடிக்கை இது. இந்த அறிக்கை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று நாடாளுமன்றில் அணுர கேள்வி எழுப்பி இருந்தார்.

நன்றி: 11.09.2022 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

அமைச்சராகும் அதா-ஜீவன்!

Next Story

கண்டுபிடிப்புகளை அதிகம் நிகழ்த்தும் நாடுகள் - ஐ.நா பட்டியல்