பிரித்தானியா: குழப்பத்திற்கு மொத்த காரணம் அவர் மனைவி தான்!

பிரித்தானிய பிரதமர் வெறும் ஒரு கைப்பாவை எனவும், நாட்டின் தற்போதைய அரசியல் குழப்பத்திற்கு மொத்த காரணம் அவரது மனைவி கேரி ஜான்சன் எனவும் குற்றச்சாட்டை முன்வைத்து புதிய புத்தகம் ஒன்று வெளியாக உள்ளது.

குறித்த புத்தகத்தில் அதன் ஆசிரியர் Lord Ashcroft தெரிவிக்கையில், கேரியின் சொல்பேச்சு கேட்டு, அவர் குறிப்பிட்டுள்ள நபர்களையே பிரதமர் ஜோன்சன் தமது ஆலோசகர்களாக நியமனம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, கொள்கை முடிவுகளிலும் கேரி ஜோன்சன் தலையிடுவதாக அந்த புத்தகத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 57 வயதான போரிஸ் ஜோன்சன் தமது 33 வயது மனைவியிடம் முற்றாக மயக்கத்தில் இருக்கிறார் என குறிப்பிட்டுள்ள அந்த புத்தகத்தின் ஆசிரியர், அவரது மனைவியின் நண்பர்களே தற்போது பிரதமரின் மிக நெருக்கமான நபர்களாக உள்ளனர் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, தமது மனைவிக்கு ஆத்திரம் ஏற்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் ஜோன்சன் எச்சரிக்கை விடுத்துள்ளதும் அந்த புத்தகத்தில் குறிப்பிட ப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த புத்தகம் தொடர்பில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தமது நண்பர்களிடம் காட்டமாக பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புத்தக விற்பனைக்காக இவ்வாறான கட்டுக்கதைகளை பலர் எழுதி விடுவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் ஐந்து ஆலோசகர்கள் பொறுப்பில் இருந்து விலக்கொண்டுள்ளதுடன், பிரதமர் போரிஸ் ஜோன்சன் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கும் இந்த சூழலில் குறித்த புத்தகம் வெளியாக உள்ளது.

மட்டுமின்றி, குறித்த புத்தகத்தில் இதுவரை வெளிவராத பல ரகசியங்களும் விளக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பிரதமர் ஜோன்சனின் உத்தியோக மொபைல்போனை பயன்படுத்தி கேரி ஜோன்சன் முக்கிய நிகழ்வுகளை கட்டுப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

Previous Story

3ம் உலகப்போர் !

Next Story

ஜே.வி.பி அரசுக்கு மில்லியன் டொலர் கடனாக வழங்க இணங்கிய கனேடிய இலங்கையர்