பிரிட்டன் பிரதமர்: ரேசில் முந்தும் லிஸ் டிரஸ்…      ரிஷி சுனக் பின்னடைவு!

இங்கிலாந்தில் பிரதமர் போரீஸ் ஜான்சனின் ராஜினாமா அறிவிப்பையடுத்து, அடுத்த பிரதமருக்கான ரேசின் 4-வது சுற்றுவரை முன்னனிலையில் இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை கருத்து கணிப்பில் பின்னுக்கு தள்ளி முன்னிலையில் வந்துள்ளார் லிஸ் டிரஸ்.

இங்கிலாந்து பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சனின் பல்வேறு சர்ச்சைகளை அடுத்து, சொந்த கட்சியினர் மத்தியிலேயே அவருக்கு அதிருப்தி ஏற்பட்டது.

இதையடுத்து அவரை பதவி விலக வலியுறுத்தி அவரது கட்சியினரை சேர்ந்தவர்களே பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தனர். இதனால், கடந்த 7-ந் தேதி போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

அடுத்த பிரதமர் யார்

அடுத்த பிரதமர் யார்

இதையடுத்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறை இங்கிலாந்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக் அடுத்தடுத்த சுற்றுகளில் வெற்றி பெற்று தற்போது இறுதி வேட்பாளராக களத்தில் உள்ளார். இவருக்கு போட்டியாக 46 வயதான லிஸ் டிரஸ் களத்தில் உள்ளார். இவர்களில் ஒருவர் தான் இங்கிலாந்தின் அடுத்த பிரதமர்.

ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு

ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு

லிஸ் டிரஸ் 1997 முதல் Conservative Party-யின் பல்வேறு பதவிகளில் பணியாற்றி வருகிறார். 1996 முதல் 2000-ம் ஆண்டு வரையில் Shell நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் மேனேஜ்மென்ட் அக்கவுன்டென்ட் ஆக தகுதியை உயர்த்திக் கொண்டு கேபிள் & வையர்லெஸ் என்னும் நிறுவனத்தில் எக்னாமிக் டைரக்டர் ஆகப் பதவி உயர்வு பெற்றார்.

கடந்த 2010-ம் ஆண்டு சௌத் வெஸ்ட் நார்போக் பகுதியில் இருந்து எம்பி-யாகத் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் காலடி வைத்தார், இதற்கு முன்பு இரண்டு தேர்தலில் இவர் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து குழந்தை பாதுகாப்பு மற்றும் கல்வி துறையின் செயலாளர் ஆக பதவி வகித்தார்.

செப்டம்பர் 5-ந் தேதி

செப்டம்பர் 5-ந் தேதி

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. களத்தில் 2 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

இந்த வாக்கெடுப்பானது வரும் செப்டம்பர் முதல் வாரம் வரை நடைபெற்று 5 ஆம் தேதி முடிவு அறிக்கப்பட உள்ளது. பிரதமர் பதவிக்கான போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்.

இதனால், அவரது வெற்றி எப்படியும் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக லிஸ் டிரஸ் முந்துவதாக தகவல்கள் கூறுகின்றன.

 போரீஸ் ஜான்சனின் சதித்திட்டமா?

போரீஸ் ஜான்சனின் சதி?

பிரிட்டனை சேர்ந்த முன்னணி இணைய வழி ஆய்வு நிறுவனமான YouGov வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, லிஸ் டிரஸ் ரிஷி சுனக்கை முந்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்சர்வேட்டி கட்சியின் உறுப்பினர்கள் 62 சதவீதம் பேர் லிஸ் டிரசுக்கே வாக்களிக்க உள்ளதாக கூறியுள்ளனர். ரிஷி சுனக்கிற்கு வெறும் 38 சதவீதம் பேரே ஆதரவு கூறியதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

எந்த அளவுக்கு இந்த தகவல் உண்மையானது என்பது தெரியாத நிலையில், அப்படி திடீரென ரிஷி சுனக் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பாரானால், உண்மையாகவே அதன் பின்னால் போரிஸ் ஜான்சனின் சதித்திட்டம் இருக்கிறதா? என்பது விரைவில் தெரியவரும் என்று சொல்லப்படுகிறது.

ரிஷி சுனக்கிற்கு எதிராக பிரசாரம்

பிரதமர் பதவியில் இருந்து விலகி தற்போது காபந்து பிரதமராக உள்ள போரிஸ் ஜான்சன் ரிஷி சுனக்கிற்கு எதிரான பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தான் விட்டுச்செல்லும் பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக்கை தவிர யார் வேண்டுமானாலும் வரட்டும் என போரிஸ் தனது சொந்த கட்சியினரிடம் கூறி வருவதாக கன்சர்வேட்டிவ் கட்சி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

ஜான்சனின் பதவி பறிபோவதற்கு ரிஷி சுனக் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். எனவே, ரிஷி சுனக் மீது போரீஸ் ஜான்சனுக்கு தனிப்பட்ட முறையில் பூசல் நிலவி வருகிறது.

Previous Story

'போராட்டம்'

Next Story

2 ஆண்டுகளாக இறந்து கிடந்த இளம்பெண்! தொடர்ந்து வாடகை வசூலித்த ஓனர்.. மிரண்டுபோன பொதுமக்கள்