பிரிட்டனில் இனவாத எதிர்ப்பு பேரணிக்கு ஆதரவு

A girl from the Olive School waves a flag of the United Kingdom during a national Muslim memorial for the late Queen Elizabeth II at the central mosque in London, England, Thursday, Sept. 15, 2022. Queen Elizabeth II, Britain's longest-reigning monarch died Thursday Sept. 8, 2022, after 70 years on the throne. (AP Photo/Martin Meissner)
பிரிட்டனில் இனக்கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாத எதிர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போலீசாரின் கடுமையான நடவடிக்கை காரணமாக, போராட்டக்காரர்களின் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன.
Latest Tamil News

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் சவுத்போர்ட் என்ற இடத்தில், கடந்த மாதம் 29ல் நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான சிறுவர் — சிறுமியர் பங்கேற்றனர். அப்போது கூட்டத்திற்குள் நுழைந்த சிறுவன் ஒருவன், கையில் இருந்த கத்தியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினான்.

இதில், 6 – 9 வயது வரையிலான மூன்று சிறுமியர் உயிரிழந்தனர். மேலும் எட்டு குழந்தைகள் இரண்டு பெரியவர்கள் காயம் அடைந்தனர்.

கத்திக்குத்தில் ஈடுபட்ட ஆக்சல் ருடகுபனா, 17, என்ற சிறுவன் கைது செய்யப்பட்டான். இவன் பிரிட்டனின் வேல்ஸ் நகரில் உள்ள கார்டிப் என்ற இடத்தை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.

ஆனால், அந்த சிறுவன் புலம்பெயர்ந்த இஸ்லாமியர் என, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது காட்டுத்தீயாக பரவியதை அடுத்து பிரிட்டனை சேர்ந்த இனவாத ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர்.

பிரிட்டன் அரசுக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் ஆதரவாக செயல்படும் வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்களுக்கு எதிராக அணி திரண்டனர். பல்வேறு இடங்களில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

பிரதமர் கீர் ஸ்டாமரின் டவுனிங் தெரு அலுவலகம் அருகே போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் திரண்டனர். அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிரதமர் அலுவலகம் மீது புகை குண்டுகளை வீசினர். போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதில், 50க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாகின. 400க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த இனக்கலவரக்காரர்களுக்கு எதிராக இனவாத எதிர்ப்பு பேரணிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு பிரிட்டன் அரசு முழு ஆதரவு அளித்தது.

புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான வாசகங்களுடன் பிரிட்டன் முழுதும் உள்ள தெருக்களில் இனவாத எதிர்ப்பு பேரணி அமைதியாக நடந்தது.

சிறப்பு பயிற்சி பெற்ற 6,000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால், போராட்டக்காரர்களின் வன்முறை சம்பவங்கள் தடுக்கப்பட்டன.

தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என கணிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தில் முதலில் கைது செய்யப்பட்ட டெரெக் டிரம்மாண்ட், 58, என்ற நபருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Previous Story

அக்டோபர் 7 தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த, ஹமாஸ் தலைவராக்கியது ஏன்?

Next Story

ஜனாதிபதித் தேர்தல்: மோதுகின்றவர்களும் முட்டிக் குனிவோரும்