‛பிரிக்ஸ்’ அடுத்த அதிரடி..

டிரம்பின் தூக்கத்தை கெடுக்கும் பிரேசில் அதிபர் லூலா..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளாார். அதேபோல் பல நாடுகளுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சீனாவுக்கு 145 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.

இருப்பினும் 30 சதவீதம் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற வரிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் டிரம்ப் அதிக வரிகளை விதித்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்தியாவும், பிரேசிலும் தான்.

நம் நாட்டை போலவே பிரேசிலுக்கும் டிரம்ப் 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். வரியை தாண்டி இருநாடுகளுக்கும் இன்னும் சில விஷயங்களில் ஒற்றுமை உள்ளது. அதாவது இந்தியாவை போல் பிரேசிலுக்கும், அமெரிக்கா தான் ஏற்றுமதி சந்தையாக உள்ளது.

அதேபோல் நம் நாடு எப்படி அமெரிக்காவை விட அங்கு அதிக பொருட்களை ஏற்றுமதி செய்கிறதோ, அதே பாணியை தான் பிரேசிலும் கடைப்பிடித்து வருகிறது. இதனால் வர்த்தக பற்றாக்குறையை சுட்டிக்காட்டி டிரம்ப் பிரேசிலுக்கும் வரியை தீட்டி உள்ளார்.

அதுமட்டுமின்றி இந்தியாவும், பிரேசிலும் ‛பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் முக்கியமான நாடுகள். பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது உலகளாவிய வர்த்தகத்தில் டாலருக்கு பதிலாக வேறு கரன்சியை அறிமுகம் செய்யும் திட்டத்தை வைத்துள்ளது. இதனால் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளை குறிவைத்து டிரம்ப் சீண்டி வருகிறார்.

இந்த கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா உள்பட 10 நாடுகள் உள்ளன.  பென்டகன் ‛பீட்சா’ ஆர்டரால் அதிகரித்த பரபரப்பு தற்போது டிரம்ப் அனைத்து நாடுகளுக்கும் வரி போடுவது என்பது அவர் மீது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே தான் அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா, சீனா, பிரேசில், இந்தியா கைகோர்த்துள்ளன. இப்படியான சூழலில் தான் செப்டம்பர் 8 ம் தேதி பிரிக்ஸ் நாடுகளின் ஆன்லைன் கூட்டத்தை பிரேசில் அதிபர் லூலா கூட்டி உள்ளார்.

இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் டிரம்ப் வரி விதிப்பு நடவடிக்கை பற்றி விவாதிப்பது தான். மேலும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை அதிகரிப்பது தான்.

இந்தியா இன்னும் 2 மாதத்தில் மன்னிப்பு கேட்டு சரணடையும்.. அமெரிக்க வர்த்தக செயலாளர் திமிர் பேச்சு டிரம்பை சீண்ட வேண்டும் என்று நினைத்தால் இந்த கூட்டத்தில் பிரிக்ஸ் கரன்சி பற்றியும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் இந்த ‛பிரிக்ஸ்’ கூட்டம் தற்போது பெரும் கவனம் பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. பிரதமருக்கு பதிலாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார். அதேபோல் பிற உறுப்பு நாடுகளின் தலைவர்கள் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்? என்பது இன்னும் தெரியவில்லை.

Previous Story

කෙහෙල් බද්දර පත්මේට උදව් කළ, දේශපාලන නම් ලැයිස්තුව.

Next Story

கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 30 ஆயிரம் கோடி அபராதம் !