பிரான்ஸில் ஷாக் நெப்போலியன் காலத்து நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்! 

தங்கம் விலை உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், பிரான்ஸில் நெப்போலியன் காலத்து தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வெறுமென தங்கம்தான் வேண்டும் என்றால் நகைக்கடையில் திருடி இருக்கலாம், ஆனால் நெப்போலியன் காலத்து நகைகளை திருடியது என்பது, திட்டமிட்ட சதி என்று சொல்லப்படுகிறது.

பாரிஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் இந்த திருட்டு சம்பவம் நடந்திருக்கிறது.

நெப்போலியன் காலத்து நகைகள் திருடப்பட்டதால், அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மோனாலிசா ஓவியம் உள்ளிட்ட உலகின் முக்கியமான வரலாற்று கலைப் பொருட்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கொள்ளையர்கள் ஹைட்ராலிக் ஏணி மூலம் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து நகைகளை திருடி சென்றுள்ளனர்.

Napoleon jewels Paris

இக்கொள்ளை காலை 9:30 மணியளவில் நடந்தது. செயின் நதியை நோக்கியுள்ள கட்டுமானப் பகுதியின் வழியாக கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர்.

அங்கிருந்து ஹைட்ராலிக் ஏணியைப் பயன்படுத்தி அப்பல்லோ கலைக்கூடத்தை அடைந்தனர் என்று பிரெஞ்சு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அப்பல்லோ கலைக்கூடத்தில் பிரெஞ்சு அரச நகைகளின் ஒரு பகுதி காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த சமயத்தில் திருட்டு திட்டமிட்ட நடத்தப்பட்டிருக்கிறது.

டிஸ்க் கட்டரை பயன்படுத்தி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைந்து, வெறும் 7 நிமிடங்களில் நகைகளை திருடி சென்றுள்ளனர் என்று பிரான்ஸின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

கொள்ளையர்கள் நெப்போலியன் மற்றும் பேரரசியின் நகைத் தொகுப்பிலிருந்து ஒன்பது நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

திருடப்பட்ட ஒரு நகை பின்னர் அருங்காட்சியகத்திற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டது. அருங்காட்சியக நிர்வாகம் இச்சம்பவம் குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. சம்பவத்தையடுத்து அருங்காட்சியகம் மூடப்பட்டிருக்கிறது.

இந்த அருங்காட்சியகம் ஒரு நாளைக்கு 30,000 பார்வையாளர்களை ஈர்க்கும் உலகின் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட அருங்காட்சியகம் ஆகும். இது 33,000-க்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள், சிற்பங்கள் மற்றும் ஓவியங்களைக் கொண்டுள்ளது.

மோனாலிசா ஓவியம் போன்ற மிகவும் முக்கியமான வரலாற்று பொருட்கள் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous Story

සෙව්වන්දිගේ බඩුව රැක්ක නාමල් බේබිගේ පැටිකිරිය බලපංකෝ

Next Story

Police DIG කෙනෙක් කන්ජිපානි ඉම්රාන්ට රටින් පනින්න උදව් කළා!!!