பிரதிக்கு வந்த அழைப்பு!

நஜீப்

நன்றி: 16.02.2025 ஞாயிறு தினக்குரல்

அனுர அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் ஒருவர் பற்றிய கதை இது. தனது நண்பர்கள் அழைப்பின் பேரி குறிப்பிட்ட பிரதி அமைச்சர் ஒரு ஹோட்டல் வைபவத்துக்குப் போய் இருக்கின்றார்.

அவர் வீடு திரும்பியதும் அவரது கையடக்கத் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்திருக்கின்றது. அதில் அமைச்சரிடம் இப்படி ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கின்றது.

தனிப்பட்ட ரீதியில் நீங்கள் ‘போட்டுக்’ கொள்வதில் ஆட்சேபனைகள் கிடையாது. ஆனால் நீங்கள் இப்போது என்பிபி. அசாங்கத்தில் ஒரு பொறுப்புதாரி, பொது இடங்களில் நீங்கள் அப்படி நடந்து கொள்வது அவ்வளவு நல்லதல்ல என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

குறிப்பிட்ட பிரதி அமைச்சரும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இதன் பின்னர் அப்படியான தவறுகள் நடக்காது என்று மறுமுனைக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அனுர தலைமையிலான ஜேவிபி.

இப்போது என்பிபி.யாலும் இந்தக் கட்டுப்பாட்டை எதிர்பார்க்கின்றது. விஜேவீர காலத்தில் இருந்தே ஜேவிபிபி.க்கு சில ஒழுக்க விதிகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Previous Story

நவீன அனுமான் அதிரடி!

Next Story

அரசு மீதான குடிகள் கணிப்பீடு விரைவில்;!