பாஸ்போர்ட்டுக்கு பவர்…! SRI LANKA…?

வெளிநாடுகளுக்கு போக வேண்டும் என்றாலே, பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது விசாதான். எந்த நாட்டுக்குப் போனாலும் விசா வாங்க வேண்டுமா, ஈஸியாக போக முடியுமா என்ற கேள்விகள் இருக்கும்.

சிங்கப்பூர் பாஸ்போர்ட்டுக்கு பவர்ஃபுல் மவுசு.. உலகின் டாப் 5 லிஸ்ட்! இந்தியா எந்த இடத்தில் தெரியுமா? | Singapore Passport Power: Top 5 Strongest Passports in the World ...

ஆனால், சில நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே விசா வாங்காமலேயே ஏராளமான இடங்களுக்குப் பயணம் செய்யலாம்.

அப்படிப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் உலகிலேயே முதலிடத்தில் இருப்பது எந்த நாடு தெரியுமா? சிங்கப்பூர்! 2026 அக்டோபர் மாதத்துக்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

Countries by Passport Power compares nations based on the level of global travel access their passports provide. #norway #germany #passports #canada #singapore #australia #greece #usa #spain #france

அந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே விசா வாங்காமல் 193 பயண இடங்களுக்குச் செல்ல முடியும்.

டாப் 5 – ஹிட்டடித்த சிங்கப்பூர் அடுத்து 2-வது இடத்தில் எந்த நாடுகள் இருக்கின்றன தெரியுமா? ஜப்பான், தென் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகளும் இந்த இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளன.

இந்த நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தலா 188 பயண இடங்களுக்குச் செல்ல முடியும். ஸ்வீடன் 187 பயண இடங்களுக்கான வசதியுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.

பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின் ஆகிய நாடுகள் 186 பயண இடங்களுக்கான வசதியுடன் 4-வது இடத்தைப் பகிர்ந்துள்ளன.

ஆஸ்திரியா, கிரீஸ், மால்டா, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் 185 பயண இடங்களுக்கான வசதியுடன் 5-வது இடத்தில் இருக்கின்றன.

இந்திய பாஸ்போர்ட்டுக்கு இந்தப் பட்டியலில் 84-வது இடம் கிடைத்திருக்கிறது. கடந்த 2025 அக்டோபரில் இந்தியா 85-வது இடத்தில் இருந்தது. இப்போது ஒரு இடம் முன்னேறியிருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் முன்கூட்டியே விசா வாங்காமல் செல்லக்கூடிய பயண இடங்களின் எண்ணிக்கை 57-லிருந்து 55 ஆகக் குறைந்துள்ளது.

🇱🇰🎉 Sri Lankan Passport Ranks 94th on the Henley Passport Index 2026 Sri  Lanka's passport has climbed to 94th place in the latest 2026 Henley  Passport Index, marking its highest ranking in

இந்தியாவுடன் அல்ஜீரியா, மொரிட்டானியா ஆகிய நாடுகளும் 84-வது இடத்தைப் பகிர்ந்துள்ளன. இங்கேதான் ஒரு விஷயம்.. தரவரிசையில் இந்தியா முன்னேறியிருந்தாலும், விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய இடங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

லிஸ்ட் எப்படி ரெடியாகிறது ஒரு நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எத்தனை நாடுகள் அல்லது பயண இடங்களுக்கு செல்வதற்கு முன்கூட்டியே விசா வாங்க வேண்டியதில்லை என்பதை வைத்து இந்தத் தரவரிசை தயாரிக்கப்படுகிறது.

2026 அக்டோபர் மாதத்துக்கான ஹென்லி பட்டியலில் 199 பாஸ்போர்ட்டுகளும், 227 பயண இடங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இங்கே ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும்…

55 பயண இடங்களுக்கு முன்கூட்டியே விசா வாங்காமல் செல்லலாம் என்பதற்காக, அந்த இடங்கள் அனைத்துக்கும் எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் செல்லலாம் என்றெல்லாம் அர்த்தமில்லை. சில நாடுகளில் சென்றடைந்த பிறகு விசா வாங்க வேண்டியிருக்கலாம் அல்லது வேறு பயண அனுமதி தேவைப்படலாம்.

அதனால், வெளிநாட்டுக்கு பயணம் செய்வதற்கு முன்பு அந்த நாட்டின் விசா விதிகளைச் சரிபார்த்துக்கொள்வது அவசியம். மொத்தத்தில், உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் இருக்கிறது.

நமது பாஸ்போர்ட் தரவரிசை2024-96ம் நிலை. 2025-96. 2026 இந்த வருடம் அது 94ம் நிலையை அடைந்து முன்னோறி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Pakistan is ranked 98th on the 2026 Henley Passport Index

Previous Story

கிம் ஜாங் உன் மரணம்? ஆட்சியைப் பிடித்த தங்கச்சி?

Next Story

Live: Pakistan vs England, 2nd ODI