பாலஸ்தீன விஷயத்தில் பிரான்ஸ் துணிச்சலான நிலைப்பாடு!

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியிருந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அமெரிக்கா, அவரது முடிவை கடுமையாக விமர்சித்திருக்கிறது.

ஜி-7 நாடுகள் அமெரிக்கா ஆதரவு கொள்கைகளை கொண்டிருக்கின்றன. அமெரிக்காவுக்கு பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க விருப்பம் கிடையாது. சர்வதேச அளவில் அதற்கு அழுத்தம் எழுந்தாலும், இஸ்ரேலுடன் பேசிதான் பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

ஜி-7 நாடுகளும் நேற்று வரை இதே கருத்தை பிரதிபலித்து வந்தன. ஆனால், இன்று மந்தையில் இருந்து பிரிந்த ஆடு போல, “பாலஸ்தீனத்தை நாடாக நாங்கள் அங்கீகரிப்போம்” என பிரான்ஸ் பேசியிருக்கிறது.

ஜி-7 நாடுகளில் இப்படி சொன்ன ஒரே நாடு பிரான்ஸ் மட்டும்தான். பிரான்ஸின் இந்த கருத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடுமையான அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் இந்த நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க் ரூபியோ, “பிரான்ஸின் இந்த முடிவு மிகவும் அவமானகரமானது.

அக்.7 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி” என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக அடக்குமுறைகளை ஏவி வந்தது. இதற்கு எதிராக கடந்த 2023ம் ஆண்டு அக்.7ம் தேதி பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது.

இதில் 1500 பேர் வரை கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதைத்தான் ரூாபியோ அக்.7 தாக்குதல் என்று குறிப்பிடுகிறார். ஆனால், அக்.7 தாக்குதலை சாக்காக வைத்துக்கொண்டு ஏறத்தாழ 60,000 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொலை செய்திருக்கிறதே, அது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால், அவரிடமிருந்து பதிலே வராது.

பிரான்ஸின் நிலைப்பாட்டை இஸ்ரேலும் விமர்சித்திருக்கிறது. இஸ்ரேல் விமர்சிக்கத்தான் செய்யும். ஏனெனில் இது அவர்களுக்கு எதிரான நிலைப்பாடு ஆச்சே! எனவே, “பிரான்ஸின் நிலைப்பாடு வெட்கக்கேடானது” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொந்தளித்திருக்கிறார்.

சர்வதேச நீதிமன்றம் இவரை போர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தபோது, இஸ்ரேல் மக்களும் நெதன்யாகுவை பார்த்து ‘வெட்கக்கேடு’ என்றுதான் சொல்லியிருந்தார்கள். எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐநா பொதுச்சபை கூட்டம் நடைபெற இருக்கிறது.

அதில் வைத்துதான் பாலஸ்தீனத்தை நாங்கள் அங்கீகரிப்போம் என்று பிரான்ஸ் கூறியிருக்கிறது. தற்போது அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கு இடையே இப்படியொரு டிவிஸ்ட் ஏற்பட்டிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

பாலஸ்தீனம் மீதான போர் நிறுத்தப்பட வேண்டும். அக்.7 தாக்குதலுக்கு ஹமாஸ் தலைவர்கள் மீது சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த கைது நடவடிக்கையும், போருக்காக நெதன்யாகு மீது பிறப்பிக்கப்பட்ட கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பலரின் கருத்தாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

ලසන්තව මැ#වෙ කව්ද?

Next Story

மாகாணசபை தேர்தல் வருகிறது!