‘பாலஸ்தீன்’ சீன அதிரடி!

-யூசுப் என் யூனுஸ்-

பாலஸ்தீன் தொடர்பாக சீனா கடந்த வாரம் அதிரடியான ஒரு கருத்தை துனிச்சலுடன் வெளியிட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது. சீன அதிபர் சீ ஜின்பிங் 70 வருட பிறப்பை முன்னிட்டு நடந்த ஒரு நிகழ்வில் அவரே இந்தக் கதையை சொல்லி இருக்கின்றார்.

1967களில் பாலஸ்தீன் எப்படி இருந்ததோ அதே நிலப் பரப்புக்களுடனும் ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட சுதந்திர பாலஸ்தீனத்தை அந்த மக்களுக்கு சீனா பெற்றுக் கொடுக்கும் என்று சீன அதிபர் சீ ஜின்பிங்  பகிரங்கமாக அறிவிப்பச் செய்திருந்தார். அவரது இந்த ‘இசூ’ தொடர்ப்பில் எமக்கு இப்படி ஒரு பார்வையும் இருக்கின்றது.

Breaking News Highlights: Chinese President Xi Jinping meets Palestinian President Mahmoud Abbas | News9live

நெடுங்காலமாக சீனா பாலஸ்தீனர்களின் உரிமைகள் தொடர்பான இதே நிலைப்பாட்டில்தான் இருந்து வந்திருக்கின்றது. அதனை விமர்சிக்க முடியாது. சீ ஜின்பிங்  இந்த அறிவிப்பு மூலம் உலகில் வாழ்கின்ற 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்களினதும் அபிமானத்துக்கும் அவர் தன்னை ஆளாக்கி இருக்கின்றார். இதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. மேலும் உலகில் இருக்கின்ற அணைத்து இஸ்லாமிய நாடுகளையும் இந்த கதை மூலம் அவர் தனது பிடிக்குள் கொண்டு வருகின்றார். என்பதுதான் எமது கருத்து.

இது ஒருவகையில் அரசியல் இராஜதந்திர விளையாட்டாகவும் இருக்கக் கூடும். தற்போது சீனாவுக்கு விஜயம் செய்திருக்கும் பாலஸ்தீனத் தலைவர் அப்பாஸ் முன்னிலையில்தான் அவர் இந்த உறுதி மொழியைக் கொடுத்து அசத்தி இருக்கின்றார்.

நன்றி: 18.06.2023 ஞாயிறு தினக்குரல்

பாலத்தீன வரலாறு

disappearing-palestine copy.jpg

நடுநடுங்கிப் போன அமெரிக்கா-இஸ்ரேல்!

இஸ்ரேல் பாலத்தீன போரில் இத்தனை காலம் அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் சீனா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் தொடங்கியது முதல் உலகப்போரின் முடிவில் இருந்துதான்.

தற்போது இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று அழைக்கப்படும் பகுதிகள் எல்லாம் முதல் உலகப்போருக்கு முன் உதுமானியப் பேரரசு (Ottoman Empire) கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது இங்கு அரபு இஸ்லாமியர்கள் அதிக அளவிலும், யூதர்கள், கிறிஸ்துவர்கள் மிக குறைவான அளவிலும் இருந்தனர். அதன்பின் முதல் உலகப் போர் முடிந்து, உதுமானியப் பேரரசு வீழ்ந்த பின் இந்த பகுதி பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிற்கு வந்தது.

அப்போதில் இருந்தே இந்த பகுதி பலாஸ்தீனம் என்றுதான் அழைக்கப்பட்டது. இந்த பகுதியை யூதர்கள் தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த பூர்வீக பூமியாக கருதினார்கள். இதனால் யூதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இங்கு குடியேற தொடங்கினார்கள். அப்போதே யூதர்கள் பாலஸ்தீனியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. சின்ன சின்ன நில தகராறுகள் ஏற்பட்டது.

இங்கு ஒரு வகையில் யூதர்களின் குடியேற்றத்திற்கு பிரிட்டிஷ் மறைமுகமாக ஆதரவு அளித்தது. இதனால் பல நூறு வருடங்களாக அங்கு வசித்து வந்த இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளை இழக்க நேரிட்டது. இதை தொடர்ந்துதான் இரண்டாம் உலகப் போர் வந்தது. இதில் யூதர்கள் பல லட்சம் பேர் கொல்லப்பட்ட நிலையில், இவர்களுக்காக தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு, பாலஸ்தீனம் குறி வைக்கப்பட்டது.

பாலஸ்தீனம் 1947ல் ஐநா மூலம் மொத்தமாக பங்கு போடப்பட்டது. ஐநாவின் திட்டப்படி பாலஸ்தீனம், அரபு மற்றும் யூதர்களின் கட்டுப்பாட்டில் இரண்டு நாடாக பிரிக்கப்படும். பாலஸ்தீன மக்களுக்கு 50%க்கும் குறைவான நிலம் ஒதுக்கப்படும்.

அமெரிக்கா தலையீடு

ஜெருசலேம் சர்வதேச கட்டுப்பாட்டில் இருக்கும் என்று ஐநா கூறியது. ஆனால் அங்கு பூர்வீகமாக இருந்த பாலஸ்தீன மக்கள் இதை ஏற்கவில்லை. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக இதை அவர்கள் கருதினார்கள். ஆனால் யூதர்கள் இதை ஏற்றுக்கொண்டு இஸ்ரேல் என்ற தனி நாட்டை அறிவித்தனர். பாலஸ்தீனம் இதை ஏற்றுக்கொள்ள நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீனத்துடன் 1948ல் போருக்கு சென்றது. 1 வருடம் நடந்த போரில் இஸ்ரேல் வென்றது.

இந்த போர்தான் மொத்தமாக அங்கு நிலைமையை மாற்றியது. இந்த போரில் வென்ற இஸ்ரேல், ஐநா கொடுத்ததை விட கூடுதல் நிலங்களை பாலஸ்தீனத்தில் இருந்து போருக்கு பின் அபகரித்தது. 70%க்கும் அதிகமான நிலம் பாலஸ்தீனத்திடம் இருந்து பறிபோனது. இதில் பாலஸ்தீனத்துடன் இணைந்து போரிட்ட அரபு நாடுகளான ஜோர்டன் வெஸ்ட் பேங்க் பகுதியை கைப்பற்றியது. எகிப்து காஸாவை கைப்பற்றியது. ஜெருசலேம் பகுதி இஸ்ரேல் – ஜோர்டன் இடையே பங்கிடப்பட்டது.

போர் மூண்டது

அப்போது பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பை தொடங்கிய இஸ்ரேல் அதன்பின் வரிசையாக தினமும் ஆக்கிரமிப்பை செய்து வந்தது. இதனால் பாலஸ்தீன மக்கள் பல லட்சம் பேர் அகதிகளாக மாறினார்கள். யூதர்கள் பல லட்சம் பேர் பாலஸ்தீன நிலங்கள், வீடுகளை ஆக்கிரமித்தனர். இப்படி ஆக்கிரமிப்பு செல்ல செல்ல அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மீண்டும் மோதல் தீவிரம் ஆனது. இதனால் 1967ல் மீண்டும் போர் மூண்டது.

இந்த இரண்டாவது போரிலும் இஸ்ரேல் வென்றது. இந்த 6 நாள் போரில் இஸ்ரேல் கட்டுப்பாட்டிற்குள் காசா, வெஸ்ட் பேங்க் இரண்டும் வந்தது. ஆனால் இங்கு பாலஸ்தீன மக்கள் அதிகம் இருந்தனர். இந்த நிலையில் கிழக்கு ஜெருசலேம் பகுதியை இஸ்ரேல் அதிகாரபூர்வமாக தங்களுடன் இணைந்தது. 1987, 1993 மோதல் என்று வரிசையாக பல்வேறு மோதல்களில் இஸ்ரேல் பாலஸ்தீன நிலங்களை கைப்பற்றியது.

Hamas Leader Thanks Ayatollah Khamenei for Supporting Palestine - Politics news - Tasnim News Agency

ஹமாஸ்

அதன்பின் 1995ல் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராபத் மற்றும் இஸ்ரேல் பிரதமர் ரபின் இடையே இரண்டு நாட்டு கொள்கைக்கான ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் செய்யப்படவில்லை. 1995ல் செய்யப்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தத்தில் வெஸ்ட் பேங்க், பாலஸ்தீனத்தின் பெரும்பகுதி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வந்தது. பாலஸ்தீன விடுதலையில் பிஎல்ஓ இருந்தாலும் ஆயுதம் தாங்கிய அமைப்பான ஹமாஸ் படையும் காசாவில் தோன்றிரியது.

அதன்பின் 2000-2005 வரை காஸாவிலும், ஜெருசலேமிலும் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் 2005ல் காசாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது. காஸா ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ளது. ஆனால் காஸாவின் அனைத்து எல்லைகளும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது.

சீனா

எங்கள் முதுகில் குத்திவிட்டனர்.. இஸ்ரேல் உடன் யு.ஏ.இ ஒப்பந்தம்.. பாலஸ்தீனம் பாய்ச்சல்!  இஸ்ரேல் பாலத்தீன போரில் இத்தனை காலம் அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் சீனா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது.

பாலஸ்தீன நாட்டின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் சீனா சென்றுள்ளார். 3 நாள் பயணமாக சென்ற அவருக்கு ஜி ஜின்பிங் மிக பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்துள்ளார். பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் பாலஸ்தீனத் தலைவருக்கு முழு ராணுவ மரியாதையுடன் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாலஸ்தீனத்தின் கோரிக்கைளை செவி மடுப்போம், அவர்களின் எண்ணங்கள் நிறைவேற உடன் நிற்போம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிரடியாக அறிவித்துள்ளார். பாலஸ்தீனத்திற்கு  உலக நாடுகள் எதுவும் இத்தனை காலம் பெரிதாக நேரடி ஆதரவு கொடுக்காத நிலையில் சீனா இப்படி ஆதரவு கொடுத்து இருப்பது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Previous Story

நீருக்கடியில் போகும் விளக்கு!

Next Story

"கோழியில் இருந்து முட்டை வந்ததா.. முட்டையில் இருந்து கோழி வந்ததா"?...