பாலமுனை:பொலிஸ்-பொது மக்கள் மோதல்

பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பொலீஸ் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்று கொண்டிருந்த நபரை நிறுத்தியதாகவும் அவர் நிறுத்தாமல் சென்றதனால் பாதுகாப்பு கடமையில் இருந்தவர்கள் அவரை பலவந்தமாக தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் காரணமாக படுகாயமுற்ற நிலையில் அவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் பொலிஸ் சோதனைச்சாவடியை தாக்கி அழித்ததுடன் பொது மக்களுக்கும் பாதுகாப்பு கடமையில் இருந்வர்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து மேலதிக விசாரணைக்காக வந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினரையும் தாக்கியுள்ளனர்.

இதன்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமுற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பொது மக்களால் தாக்கப்பட்ட பொலிஸ் நிலைய பொறுபதிகாரி உள்ளிட்டோரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் உயர்மட்டக்குழு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Previous Story

ரணில் இம்டியாஸ் விரோதி - சாணக்கியன் 

Next Story

தீர்வுக்கு ஒன்றிணைந்த கலந்துரையாடல்- ரணில்