கண்டி மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலுக்கு விண்ணப்பித்த பல வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் பாததும்பற பிரதேச சபை SLMC மற்றும் UNP வேட்புமனுக்கள் அடக்கம்…!
கடந்த முறையும் இதே போன்று பாததும்பற பிரதேச சபைக்கான SLMC வேட்பு மனு அங்கு நிராகரிக்கப்பட்டது. இது கட்சிக்குள்ளே நடக்கின்ற திட்டமிட்ட ஒரு சதியாக இருக்கலாம் என்றும் ஒரு பலமான சந்தேகம் இருக்கின்றது. கடந்த முறையும் நாம் இதனை அப்படியே சுட்டிக் காட்டி இருந்தோம்.
இந்த முறையும் அப்படி…! இது எப்படி சாத்தியம்? இதே போன்று அகுரண பிரதேச சபைக்கான SLMC வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.