பாததும்பரை தேர்தல் நகைச்சுவை!

நெடுங்காலமாக நாம் தேசிய, சர்வதேச அரசியல் ஆய்வுகளையும் விமர்சனங்களையும் செய்து வருவது வாசகர்கள் அறிந்ததே. அந்த வகையில் 2023 உள்ளூராட்சித் தேர்தலில் நமது கண்ணில் பட்ட சில தகவல்களும் செய்திகளும் புதிய வகை நகைச்சுவைகளாக அமைந்திருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது. அவற்றை நாம் எமது வாசகர்களுடன் பகிந்து கொள்ள விரும்புகின்றோம்.

வயல் வெளிகளில் சிறுவர்கள் கோஷடி பிரிந்து கிரிக்கட் விளையாடுகின்ற நேரங்களில் கூட ஒரு கோஷடியில் விளையாடியவர் வென்றாலும் தோற்றாலும் மற்றுமொரு கோஷடியில் விளையாட முடியாது-அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குழந்தைகள் கூடத் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

ஆனால் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் கண்டி-பாததும்பரைத் தொகுதியில் அதாவுல்லாவின் தேசிய காங்கிரசில் (குதிரை) போட்டியிடும் அதே வேட்பாளர், எம்.எஸ்.எம். மர்சூக் (670751767v) என்பவர் தலைமையிலான சுயேட்சைக் குழுவிலும் போட்டியிடுகின்றார்.

அப்படி இரு வேட்புமனுவில் கையொப்பமிட்டவர் பற்றிய தகவல்கள் இது.

மொகம்மட் ஜலீல் மொகம்மட் அரபாத் 911802260v 41/2 கோஹங்காமகொட்டுவ மடவல கடவீதி (தேசிய காங்கிரஸ் பட்டியல் 16ம் இலக்கம்)
மொகம்மட் ஜலீல் மொகம்மட் அரபாத் 911802260v 41/2 கோஹங்காமகொட்டுவ மடவல கடவீதி (மர்சூக் சுயேட்சை குழு -மீகம்மன 5ம் வட்டாரம்)

நாம் அறிந்த வகையில் இது ஒரு புதிய கதை. அப்படி ஒருவர் இரு விண்ணப்பங்களில் போட்டியிட முடியாது என்பதுதான் நமக்குத் தெரிந்த அரசியல். இந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும் தேர்தல் முடிவுகளில் அவர்கள் ஆசனங்களை வென்றிருந்தாலும் இது சட்டச் சிக்கலுக்கு இலக்காகலாம்.

இது விவகாரத்தில் தேர்தல் ஆணையாளர் பதிலை நாமும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம். இது போன்ற நிறையவே தகவல்கள் எமக்கு ஆதாரபூர்வமாகக் கிடைத்திருக்கின்றன. அது பற்றிய தகவல்களை நாம் தொடர்ந்து எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றோம்.

Previous Story

சாடிக்கு ஏற்ற மூடிகள்

Next Story

100 க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிப்பு