பாக்:33 தொகுதியிலும் நானே போட்டி.. இம்ரான் கான் தடாலடி !

பாகிஸ்தானில் 33 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளில் இம்ரான்கானே போட்டியிட உள்ளதாக அவரது பிடிஐ கட்சி அறிவித்துள்ளது.
33 தொகுதிகளிலும் இம்ரான்கானே போட்டியிடுவதாக அறிவித்துள்ளது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவுக்கு அப்போது பிரதமராக இருந்த இம்ரான கானே காரணம் என விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து இம்ரான்கான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, இம்ரான் கான் அரசு கவிழ்க்கப்பட்டது.

பாகிஸ்தானை காப்பாற்றுவேன் என்று கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கான் ராஜினாமா செய்ததை அடுத்து ஷெபாஸ் ஷெரீப் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பிரதமராக பதவி வகித்து வருகிறார். எனினும், கையை விட்டு போன பிரதமர் பதவியை, எப்படியாவது மீண்டும் கைப்பற்றி, பாகிஸ்தானை காப்பாற்றுவேன் என்று பிரச்சாரத்தையும் இம்ரான் கான் கையில் எடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பேரணி ஒன்றில் கலந்து கொண்ட இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கூட்டாக ராஜினாமா இதில், அவரது வலது காலில் குண்டு பாய்ந்தது. எனினும் இம்ரான் கான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்றாலும், தன்னை அரசியலில் இருந்து விரட்டியடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக இம்ரான் கான் தெரிவித்து வருகிறார்.

இப்படி பாகிஸ்தான் அரசியலில் பரபரப்புக்கு கொஞ்சமும் சளைக்காத நபராக இம்ரான் கான் இருந்து வருகிறார். இதனிடையே இம்ரான் கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த போது அவரது கட்சியை சேர்ந்த எம்.பிக்களும் கூட்டாக ராஜினாமா செய்தனர்.

33 தொகுதிகளுக்கு தேர்தல் ராஜினாமா செய்தவர்களில் 33 பேரின் ராஜினாமாக்கள் கடந்த மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. காலியாக உள்ள இந்த 33 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் மார்ச் 16 ஆம் தேதி இந்த தேர்தல் நடைபெற உள்ளது.

பஞ்சாப் 12 , கைபர் பகதுன்காவில் 8,  இஸ்லமாபாத்தில் 3,            சிந்து  9, பலுசிஸ்தானில் 1.

தொகுதி என மொத்தம் 33 தொகுதி பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இம்ரான் கான் மட்டுமே போட்டி இந்த இடைத்தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று இம்ரான் கான் அறிவித்தார். ஆனால், 33 தொகுதியிலும் தானே போட்டியிடுவதாக அதிரடியாக அறிவித்து பரபரப்பை கிளப்பி விட்டு இருக்கிறார் இம்ரான் கான்.

இது தொடர்பாக இம்ரான் கான் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா முகம்மது குரேஷி கூறியதாவது:- மார்ச் மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் கூட்டம் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது.

இதில் இடைத்தேர்தல் நடைபெறும் 33 பாராளுமன்ற தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 33 தொகுதிகளிலும் ஒரே வேட்பாளராக இம்ரான் கான் இருப்பார்” என்றார்.

6 தொகுதியில் வெற்றி

இடைத் தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் அவர் மட்டுமே நிற்பதாக அறிவித்து இருப்பது பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் 7 தொகுதிகளில் போட்டியிட்ட இம்ரான் கான் அதில் 6 ல் வெற்றி பெற்றது நினைவு கொள்ளத்தக்கது.

Previous Story

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு -32 பேர் பலி

Next Story

தான்சானியா  ஜனாதிபதியிடம் ரணில் பாடம் கற்றுக் கொள்வாரா..?