பாக்.இம்ரானுக்கு மூன்று நாள் நிம்மதி!!

இஸ்லாமாபாத்-பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல், பார்லிமென்ட், 28ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பெரும்பான்மைநம் அண்டை நாடான பாகிஸ்தான் பார்லி.,க்கு, 20ல் நடந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் – இ – இன்சாப், தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. இதையடுத்து, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்த இம்ரான், பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடி, பண வீக்க உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக, இம்ரான் அரசு மீது, முஸ்லிம் லீக், பாக்., மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லி.,யில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.

இம்ரான் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்து, ஆளும் கூட்டணியில் இருந்து முத்தாஹிதா குவாமி, பாக்., முஸ்லிம் லீக் -குவைட் மற்றும் பலுசிஸ்தான் அவாமி ஆகிய கட்சிகள் வெளியேறின. இந்நிலையில், பாகிஸ்தான் பார்லிமென்ட் நேற்று காலை கூடியதும், சபாநாயகர் ஆசாத் கைசர், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்காமல், பார்லிமென்ட் 28 ௮ம் தேதி மாலை4.00 வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

இதனால், வரும் 28 ௮ல் தான், இம்ரான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, ஓட்டெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்., பார்லி.,யில்,

மொத்தமுள்ள 342 உறுப்பினர்களில்,

பெரும்பான்மைக்கு 171 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

இதில், இம்ரான் கட்சிக்கு 155 உறுப்பினர்களுடன்,

ஆறு கூட்டணி கட்சிகளை சேர்ந்த, 21 உறுப்பினர்களின் ஆதரவு

இருந்து வந்த நிலையில், சில கூட்டணி கட்சிகளின் விலகல் முடிவு, இம்ரானுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், இம்ரானின் கட்சியிலேயே, அவருக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள 24 எம்.பி.,க்கள், அரசுக்கு எதிராக ஓட்டளிப்போம் என அறிவித்துள்ளனர். இதனால், இம்ரான் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

Previous Story

CWC அதிரடி IN OR OUT!

Next Story

சவுதி எண்ணெய் கிடங்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்