பாகிஸ்தானில் தங்கம் வென்ற முல்லை: தேவி

பாராட்டுக்கள்

பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற  சர்வதேச குத்துச்சண்டை போட்டியில்  முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும்  பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதிய நகர் கிராமத்தில் வாழ்ந்து வரும் இவர், குத்துச் சண்டையில் சாதித்து வருகின்றார்.

கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார் நேற்று பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற 25வயதுக்குட்ப்பட்ட 50_55கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Previous Story

830மீ. உயர புர்ஜ் கலீபா உச்சியில்  ஏறி நின்ற பெண். பின்னாடி பறந்த விமானம்: ஏன்!

Next Story

வடகொரியா  தொடர் ஏவுகணை சோதனை: சீனா காரணமா?