பாகிஸ்தானிடம் அரிசி, சிமெந்து கடனாக பெறும் இலங்கை!

பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அரிசி மற்றும் சீமெந்தை இறக்குமதி செய்ய இலங்கை முயற்சிப்பதாக  அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கான பேச்சுக்கள் பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது பாகிஸ்தானிய பயணத்தின்போது கலந்துரையாடப்பட்டதாக பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கைஅரசவர்த்தக்கூட்டுத்தாபம், விரைவில்வர்த்தகஅமைச்சுக்குஉடன்படிக்கைவரைபுஒன்றைசமர்ப்பிக்கும். இந்தவருடத்துக்குள்பாகிஸ்தானில்இருந்துஇலங்கைக்குசீமெந்து, பாஸ்மதிஅரிசிஎன்பனஇறக்குமதிசெய்யப்படவுள்ளதாகஅவர்தெரிவித்தார்.

இதேவேளை பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கானுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, தற்போது பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் பெறுமதியை 500 மில்லியன் டொலர்களில் இருந்து 2 பில்லியன் டொலர்களாக உயர்த்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

Previous Story

இலங்கை வந்த பேராசிரியர் ஹிலாலி நூர்தீன்

Next Story

ISIS பெண்கள் தளபதி அமெரிக்காவில் கைது!