பல்டிக்குத் தயாராகின்றார் ஹரின்.!

அரசுக்கு எதிரான நுகேகொட பேரணியை நாமலின் கூட்டமாக மாற்றிய குற்றச்சாட்டு ஹரின் மீது. அதற்கு அவர் புது விளக்கம் வேறு தருகின்றார். கூட்டத்துக்கு வந்தவர்களில் எழுபத்தி ஐந்து (75) சதவீதமானவர்கள் நாமல் கூட்டி வந்த ஆட்கள்.

அதனால் அவரைக் கௌரவப்படுத்தவே தான் அவரை அங்கு ஹீரோவாகச் சித்தரித்ததாக ஹரின் கூறுகின்றார். அவரது விளக்கத்தை பொரும்பாலான கூட்டணி சகாக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

ஹரின் பர்ணாந்து இப்படி நடந்து கொண்டதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன. இன்று நாடாளுமன்றத்தில் ஐதேக.வுக்கு ஒரு ஆசனம் கூட கிடையாது. வாக்காளர் என்றால் அங்கு இரண்டு சதவீதம் கூட இல்லை.

இதன் பின்னரும் ரணிலுடன் அரசியல் பயணம் சாத்தியமில்லை. இப்போதே நாமலுக்கு கூஜா தூக்கினால்தான் மொட்டுக்குத் தாவி நாடாளுமன்றம் நுழையலாம்.

இது சத்தியம்தான். அதனாலே ரணில் செய்தியைக்கூட படிக்காது ஹரின் குப்பையில் எறிந்தாரோ!

Previous Story

කියවන්නැතුව ගිහින් නඩුවක් දාන්න | ජනපති සභාවම නිහඬකරයි!

Next Story

Helping Hambanthota විමර්ශනවලට මොකද වුණේ?