பலமான ஷங்காய் கூட்டணி!

-யூசுப் என் யூனுஸ்-

ஒரு காலத்தில் நேட்டோ வோர்சோ என்பன மிகவும் சக்தி வாய்ந்த இரணுவக் கூட்டணி. சோவியத் யூனியல் சிதருண்டதால்  ரஸ்யா தலைமையிலான வோர்சோ  காணாமல் போய்விட்டது. தற்போது நேட்டோ இருந்தாலும் நவீன தொழிநுட்பங்கள் காரணமாக அதுமட்டுத்தான் தனிக் காட்டு ராஜா என்ற நிலையும் இன்று இல்லை. குறிப்பாக சீனா இந்தியா ரஸ்யா என்பன இராணுவ பொருளாதார ரீதியில் செல்வாக்கான நாடுகளாக மாறிவிட்டன.

இந்த நிலையில் இந்த முக்கிய மூன்று நாடுகளையும் உள்ளடக்கி அதில் பாகிஸ்தான் மற்றும் ரஸ்ய ஆதரவு மத்திய ஆசிய நாடுகளையும் இணைத்து ஷங்காய் கூட்டணி செயல்பட்டு வருகின்றது. இதில் ஈரானுக்கும் பெலாரசுக்கும் இடம் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

Download the Flag of Iran | 40+ Shapes | Seek Flag

அந்த வகையில் பார்க்கின்ற போது பொருளாதார மற்றும் இராணுவ ரீதியிலும் இதுதான் உலகில் மிகவும் விசலமானதும் செல்வாக்கானதுமான கூட்டணி. மேலும் இந்த நாடுகள் அமெரிக்காவின் டொலருக்கு பதிலாகத் தமது பணத்தை முன்னிலைப்படுத்தி நகர்வுகளை முன்னெடுக்கவும் தீர்மானித்திருக்கின்றன.

இதில் இந்திய அமெரிக்காவையும் சமாளித்து தனது எதிரிகளுடனும் சரி நிகராக நின்று லாவகமாக காய் நகர்த்தி வருகின்றது. தற்போது கூட்டணியின் தலைவராக மோடிதான் இருக்கின்றார்.

நன்றி: 09.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ராஜபக்சக்கள் அடுத்த பிறவி:காகம், நாய், பூனை -மேர்வின் 

Next Story

தேசபக்த தேரர் நெருக்கடியில்!