பற்றி எரிகின்ற பிரான்ஸ்!

-யூனுஸ் என் யூசுப்-

ஐரோப்பாவில் மிகவும் செல்வாக்கான நாடான பிரான்ஸ் தற்போது பற்றி எரிகின்றது. நகேல் என்ற அல்ஜீரியாவை பின்னணியாகக் கொண்ட இவர் சாலை வீதி ஒழுங்குகளை மீறினார் என்று சுடப்பட்டதாக செய்தி சேவைகள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

உன்னைத் தலையில் சுடப்போகின்றோம் என்று கூறியே நகேல் சுடப்பட்டிருக்கின்றார். இந்தப் படுகொலையை ஜனாதிபதி மக்ரூன் வன்மையாகக் கண்டித்திருக்கின்றார். அமெரிக்காவைப் போன்று பிரான்சிலும் கருப்பர்கள் மீதும் வெளிநாட்வர்கள் மீதும் பாரபட்சம் காட்டுவது போலத்தான் இங்கும் நடந்து வருகின்றது.

In the volatile streets of Paris, Macron may be winning his war of  attrition against the unions | CBC News

பிரான்சில் பெரும் தொகையான அரேபியர் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் படுகொலையால் நடக்கின்ற வன்முறை தலைநகர் பாரிஸ் உற்பட பல நகரங்களுக்கும் பரவி இருக்கின்றது. சுடப்பட்ட நகேலுக்கு வயது 17 மட்டுமே. மேற்குப் புறநகர் நான்டெரி பகுதியில் வைத்து அவர் சுப்பட்டிருக்கின்றார். இளைஞர்கள் பொலிசார் மீதும் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடாத்தி வருகின்றார்.

French PM calls for 'national unity' after Paris violence | Emmanuel Macron  News | Al Jazeera

கடந்த வருடம் மட்டும் 13பேர் இப்படிச் சுடப்பட்டிருக்கின்றார்கள். கலகக்காரர்கள் 760 பேர்வரை இதுவரை கைதாகி இருக்கின்றார்கள்.

நன்றி: 02.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பிலிப்பைன்ஸில் இலங்கையர் கைது

Next Story

ஆழ் கடலில் ஓடும் தேசம்