பரபரப்பான ஏப்ரல் மாதம்!

-நஜீப்

Sri Lanka hit by a political TORNADO. | lankadawasa.com

முட்டால் தினத்துடன் நாளை ஏப்ரல் மாதம் துவங்குகின்றது. ஆனாலும் இலங்கை அரசியலில் இந்த மாதம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை எடுக்கின்ற மாதமாக அமையும் என்று நாம் நம்புகின்றோம். ஜனாதிபதி ரணிலுக்கும் மொட்டுக் கட்சிக்குமிடையில் தற்போது பனிப்போரொன்று நடந்து கொண்டிருக்கின்றது.

Presidency: Gota not finalized, Basil won't contest | Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition

 

ரணில் ஜனாதிபதி தேர்தலுக்கான வரைபடங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கின்றார். பசில் பொதுத் தேர்தல்தான் முதலில் நடாத்தப்பட வேண்டும் என்று பிடியாக இருக்கின்றார். பொதுத் தேர்தலுக்குப் போவதாக இருந்தால் உடனடியாக அது பற்றிய அறிவிப்பை வெளியிட வேண்டும்.

Sisil Fernando - #politics #srilankapoliticalcartoon #unp... | Facebook

காலத் கடந்தால் ஜனாதிபதி தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி விடும். ஜனாதிபத் தேர்தல் நடந்தால் தான் மொட்டுக் கட்சியின் ஆதரவுடன் பொது வேட்பாளராக ரணில் களமிறங்க எதிபார்க்கின்றார். அந்த ஆதரவைப் பெறுவதாக இருந்தால் ராஜபக்ஸாக்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற நிலை. இதனால் இரண்டும் கெட்டான் நிலையில் ரணில் இருக்கின்றார்.

நன்றி: 31.03.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

வோட்டுக்கு ஒரு இலட்சம்!

Next Story

இரட்டை வேட ராஜாக்கள்!