
வட ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடக்கிறது. எஸ்.ஏ.எப்., என்றழைக்கப்படும், சூடான் ஆயுதப்படைக்கு அப்தெல் பத்தா அல் – புர்ஹான் என்பவர் தலைமை வகிக்கிறார். இவரது படைக்கும், ஆர்.எஸ்.எப்., என்றழைக்கப்படும், ‘ரேபிட் சப்போர்ட் போர்சஸ்’ எனும் பயங்கரவாத படைக்கும் இடையே 2023ல் போர் துவங்கியது.
ஆர்.எஸ்.எப்., பயங்கரவாத குழுவுக்கு பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்கள் ஆதரவு அளித்து வருகின்றன. தலைநகர் கார்தோம் மற்றும் தார்புர் பிராந்தியங்களை மையமாக வைத்து, இந்த சண்டை நடக்கிறது.கடந்தாண்டு செப்., நிலவரப்படி, 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்நாட்டுக்கு உள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பிற நாடுகளில் அகதிகளாக குடியேறி உள்ளனர்.