பன்றி இதய  மனிதன் உயிரிழந்தார்

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நோயாளி இரண்டு மாதம் ஆன நிலையில் நேற்று உயிரிழந்தார். அமெரிக்காவின் டேவிட் பென்னட் என்ற 57 வயது இதய நோயாளி மேரிலேண்ட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு உடனடியாக மாற்று இதயம் பொருத்த வேண்டிய நிலை இருந்தது. மாற்று உறுப்பை ஏற்கும் அளவுக்கு அவரது உடல்நிலை இல்லை. அதனால் பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தும் பரிசோதனை குறித்து டாக்டர்கள் தெரிவித்தனர்.

உயிர் பிழைப்பதற்கு இது ஒன்றே சாத்தியம் என்ற நிலையில், இந்த மருத்துவ பரிசோதனை முயற்சிக்கு டேவிட்டும், அவரது குடும்பத்தாரும் சம்மதித்தனர். இதன்படி மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் கடந்த ஜனவரியில் பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாட்களாகியுள்ள நிலையில், புதிய இதயம் செயல்படத் துவங்கியுள்ளது.

சில நாட்கள் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில் இரண்டு மாதங்கள் ஆன நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று டேவிட் பென்னட் உயிரிழந்ததாக மேரிலாண்ட் மருத்து மையம் தெரிவித்தது.

Previous Story

"அடி தூள்".. பஞ்சாப்பின் பட்டைய கிளப்பும் ஆம் ஆத்மி!

Next Story

கீவை நெருங்கிய ரஷ்ய ராணும்! பீதியில் மக்கள்