பதவி விலகல்: குடிமக்களுக்கு கதை விடும் கோட்டா..!

தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமக்கு ஐந்தாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தோல்வியுற்ற ஜனாதிபதியாக என்னால் செல்ல முடியாது. அதற்கமைய, எஞ்சிய இரண்டு வருடங்களையும் பூர்த்தி செய்த பின்னரே செல்வதாக  ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

பதவி விலக மறுப்பு

பதவி விலகல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய அதிரடி அறிவிப்பு

எனினும் தான் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய  மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ஆதரவைப் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளா்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கு நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம். குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் முன்னதாக சென்றிருந்தால், இந்த நிலை வந்திருக்காது என Bloomberg செய்தி சேவை உடனான நேர்காணலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

எனினும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டம் 59 நாட்களை கடந்து செல்கின்றன.

ஜனாதிபதிக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

பதவி விலகல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய அதிரடி அறிவிப்பு

அதேவேளை எதிர்க்கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளின் கோடடாபயவின் பதவி விலகலை வலியுறுத்தி வருகின்றன.

மறுபுறத்தில் 21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் மூலம் ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அடமிபிடிக்கின்றார்

இதற்கு முன்னரும் தனக்கு சரியாக காரியம் பார்க்க முடியவில்லை எஞ்சி இருக்கும் மூன்று வருடங்களுக்கு நான் சிறப்பாக மக்களுக்கு சேவையாற்ற இருப்பதாக ஜனாதிபதி கோட்டா கூறி இருந்ததையும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இப்போது இன்னும் இரண்டு வருடங்களும் பதவியில் இருந்த விட்டுத்தான் போவேன் என்று மனிதன் அடமிபிடிக்கின்றார். எனவே நம்மில் எத்தனை பேர்தான் வருகின்ற பட்டினிச்சாவிலிருந்து உயிர்தப்பி வாழப் போகின்றோமோ தெரியாது.

ஆனால் இன்னும் இருபது வருடங்கள் இருந்தாலும் மனிதன்-கோட்டா எதையுமே சாதிக்கப் போவதில்லை என்பதுதான் எமது கருத்து.

Previous Story

றோ-சிஐஏ முகவர்தான் பிரதமர் ரணில்!

Next Story

2023: புதிய விலைப் பட்டியல்!