படலந்த வதை முகாம்:-ரணில்

1999ஆம் ஆண்டு படலந்த ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவே என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். அதில் என்னை ஒரு சாட்சியாகவே அழைத்திருந்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பாரிய சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள பட்டலந்த வதை முகாம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றையதினம் அவர் வழங்கியுள்ள விளக்கக் காணொளியிலேயேரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

“87ம் ஆண்டில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ஜே.வி.பி. நாடுமுழுவதும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார்கள். அந்தக் கட்டத்தில் நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டும் பொறுப்பு ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் பிறகு வரவேண்டியது, பியகம பிரதேசத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், மகாவலியில் இருந்து கொழும்புக்கு மின்விநியோகம் செய்யும் இடம், சுதந்திர வர்த்தக வலயங்கள் உள்ளிட்ட முக்கிய கேந்திர இடங்கள் இருந்தன.

அவற்றைப் பாதுகாப்பதற்காக ராணுவத்தினரும் பொலிசாரும் அழைக்கப்பட்டிருந்தனர்.  அவர்களுக்கு தங்குமிடங்கள் வழங்க வேண்டிய பொறுப்பு இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் படலந்த ஒரு உர உற்பத்தி நிலையமாக செயற்பட இருந்தது. அங்கு அரச ஊழியர்கள் சிலரும் வசித்தார்கள்.

அக்காலகட்டத்தில் சப்புகஸ்கந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும் ஜே.வி.பி.யினர் படுகொலை செய்திருந்தார்கள். இன்னும் பல பொலிஸ் அதிகாரிகளையும், மாகாண சபை உறுப்பினர்களையும் படுகொலைசெய்திருந்தார்கள்.

Debate on Batalanda Commission Report on April 10

அந்தக் கட்டத்தில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தின, என்னைத் தொடர்பு கொண்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிசாருக்கு பாதுகாப்பாக வசிப்பதற்கு படலந்தையில் காலியாக இருந்த வீடுகளை ஒதுக்கிக் கொடுக்க வழிசெய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அதன் பிரகாரம் அந்த வீடுகளை அப்போதைய களனி பொலிஸ் அத்தியட்சகர் நளின் தெல்கொட அவர்களின் பொறுப்பில் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பதவியில் இருந்த அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

அதன் பின்னர் 1994ம் ஆண்டின் பின்னர் சந்திரிக்கா அரசாங்கம், பட்டலந்தையில் வதைமுகாம் ஒன்று இருந்ததா என்பதைக் கண்டறிய விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைத்தது. அதன் முக்கிய நோக்கம், அரசியல் ரீதியாக சேறுபூசுவதாகும்அக்காலத்தில் நான் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தேன்.

1999ஆம் ஆண்டு படலந்தை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவே என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். அதில் என்னை ஒரு சாட்சியாகவே அழைத்திருந்தார்கள். மேலும் பலரும் சாட்சிகளாக அழைக்கப்பட்டிருந்தார்கள்.

அதன்போது ஒரு அமைச்சர் என்ற வகையில் பட்டலந்தை வீட்டுத் தொகுதியில் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு நேரடியாக வீடுகளை வழங்கியது தவறு என்று குறிப்பிடப்பட்டது.

பொலிஸ் மா அதிபர் ஊடாக அதனை வழங்கியிருக்கலாம் என்பதே ஆணைக்குழுவின் நிலைப்பாடு. மற்றபடி எனக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை.

Previous Story

சொல்ல சொல்ல கேட்காத பாகிஸ்தான்..!

Next Story

மாசிடோனியா:தீ விபத்து 51 பேர் பலி