நைஜீரியாவில் படகு விபத்து: 76 பேர் பலி

நைஜீரியா நாட்டில் அனம்பிரா மாகாணத்தில் ஆக்பாரு பகுதியில் 85 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று சென்றுள்ளது.

இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் படகு சிக்கி கொண்டது. இதனால் படகில் இருந்தவர்கள் அனைவரும் பயத்தில் அலறினர். நீச்சல் தெரியாத பலரும் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களில் 76 பேர் வரை உயிரிழந்து உள்ளனர் என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை காணவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு மற்றும் நிவாரண பணி குழுக்களை சேர்ந்தவர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த துயர சம்பவத்திற்கு அதிபர் முகமட் புகாரி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதலும் தெரிவித்து உள்ளார்.

இந்த படகு விபத்து போன்று வருங்காலங்களில் வேறு சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படியும், ஆய்வு செய்யும்படியும் அவற்றுடன் தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கும் அதிபர் உத்தரவிட்டு உள்ளார்.

Previous Story

செளதி அரேபியா- அமெரிக்கா உரசலுக்கும் ரஷ்யாவிற்கும் என்ன தொடர்பு?

Next Story

பாக்:தலைமை நீதிபதி  சுட்டுக்கொலை