-நஜீப்-
நமது இதயம் சற்றுக் கடினமான ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். இதனால் வாழ்க்கையில் மிகவும் கடினமான தீர்மானங்களையும் மிகவும் எளிதாக எடுத்திருக்கின்றோம். ஆனால் அண்மையில் நேரே பார்த்த ஒரு சம்பவம் நமது இதயமே நெகிழ்ந்து போகும் அளவில் இருந்தது.
இதுவும் ஜனாதிபதி தேர்தல் பற்றிய ஒரு கதைதான். நாம் அனைவரும் நான்கு அறிந்த ஒரு மனிதன் தான் சரத் பொன்சேக்கா. இவரும் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இந்த முறையும் இருக்கின்றார். குண்டடிபட்டு உடலே சிதைந்தாலும் நாட்டையே மீட்டுக் கொடுத்தவர் என்பதால் மனிதன் பீல்ட் மார்ஷலானார்.
பேரினத்தவரால் பெரிதும் மதிக்கப்படுகின்றார். அவரது தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்று கண்டியில் நடந்து கொண்டிருந்தது. மேடையில் பண்ணிரெண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். பார்வையாளர் பக்கத்தில் ஏழு பேர் கீழே அமர்ந்திருந்தனர்.
நாடு பூராவிலும் இதே நிலை. இப்படியான ஒரு மா மனிதனுக்கு இந்த அவலமா? கருடா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் நல்லது என்றுதான் தளபதிக்கு சொல்ல வேண்டும்.
நன்றி: 01.09.2024 ஞாயிறு தினக்குரல்





