நேப்பாளில் சிக்கிய செவ்வந்தி | ஸ்கெட்ச் போட்டு தூக்கிய INTERPOL | யார் இந்த அழகிய கொலைகாரி ?

குறிப்பு

ஐயா கதை தமிழக வாசகர்களுக்குப் புதிதாக இருந்தாலும் இலங்கையர்களுக்கு அவை பழங்கதை. ஐயா கதை சொல்லும் பாணிக்காக அவருக்கு அங்கு இலட்சிக்கணக்கான வாசகர்கள். இருந்துவிட்டுப் போகட்டும்.

அவர் அதில் சொல்லும் பல நிகழ்வுகள் தப்பானது. உதாரணம் செவ்வெந்தி தாய் கைது. சிறையில் மரணம். என்பதெல்லாம் அவரது அறியாமை. அப்படி ஏதாவது இங்கு நடந்ததா என்று நாம் இலங்கையரைக் கேட்கின்றோம்.

அவர் புதிய அணுர அரசு வந்ததால்தான் நாட்டில் போதைக்கு எதிரான அதிரடிகள் நடக்கின்ற என்பதனை உச்சரித்துவிடமால் பார்த்துக் கொண்டார்.

காரணம் என்ன தெரியுமா? ஜனாதிபதி தேர்தல் நடந்த போது அணுர ஆறு இலட்சம் வாக்குகளைக் கூட பெறமாட்டார். அப்படி கனவு காண்பவர்களை இவர் பைத்தியங்கள் என்றும் சொல்லி இருந்தார்.

அந்த நாட்களிலே ஐயா உங்கள் மீது எமக்கும் ஒரு மதிப்பும் மரியதையும் இருந்தது. ஏன் இப்படி மூக்குடைபடப்போகின்றீர்கள் என்று நாம் ஊடகங்களில் கேள்வி எழுப்பி இருந்தோம்.

தகவல்கள் எந்தளவுக்கு திரிவுபடுத்தப்படுகின்றது என்பதற்கு இது நல்ல உதாரணம் என்பதால் இந்தக் குறிப்பு.

Previous Story

ரணில் பற்றி தயாசிரி சொன்னது!

Next Story

விஜய்-க்கு நடிகை தான் வரணுமா?