முன்கூட்டியே துல்லியமாக கணித்த மாஜி ரா ஏஜெண்ட்
நமது அண்டை நாடான நேபாளத்தில் இருந்த ஷர்மா ஒலி தலைமையிலான அரசு மக்கள் போராட்டத்தால் சில நாட்களுக்கு முன்பு கவிழ்ந்தது. நேபாளத்தில் இருக்கும் அமைதியின்மை காரணமாக அந்நாட்டு அரசு கவிழும் என்பதை மாஜி ரா ஏஜெண்ட் கணித்துள்ளார்.
இது தொடர்பான அவரது பேச்சு இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு உலக நாடுகளில் தொடர்ச்சியாகக் குழப்பங்கள் அரங்கேறி வருகிறது.
அப்படி தான் இப்போது நேபாளத்தில் பெரிய வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்நாட்டில் இருந்த ஷர்மா ஒலி தலைமையிலான அரசும் கவிழ்ந்தது.
ரா ஏஜெண்ட் இதற்கிடையே நேபாள குழப்பம் தொடர்பாக இந்திய உளவு அமைப்பான ரா (RAW) மாஜி ஏஜெண்ட்டும் என்எஸ்ஜி (NSG) கமாண்டோவுமான லக்கி பிஷ்ட்டின் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
நேபாளத்தில் மிக மோசமான சூழல் இருப்பதால் அந்நாட்டு அரசு கவிழும் என்று அவர் சில மாதங்களுக்கு முன்பே கூறியிருந்தார்.. அவர் சொன்னது போலவே நேபாள அரசு கவிழ்ந்துள்ளது.
அந்த வீடியோவில் அவர் மேலும், “இன்று (டிசம்பர்) 12ஆம் தேதி, இதைக் குறித்துக்கொள்ளுங்கள். சீக்கிரமே நேபாள அரசு கவிழும். இது அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் நான் சொன்னதைக் கவனமாக யோசியுங்கள்.
சீக்கிரமே சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட நேபாள அரசு கவிழ்ந்துவிட்டது என்ற செய்தி வரும். இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்?” என்று பேசியுள்ளார். P
விடாமல் துரத்திய பொதுமக்கள் எப்போது சொன்னார் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி பிஷ்ட்டின் இந்த கருத்தைச் சொன்னதாக இணையத்தில் சிலர் சொல்லி வருகிறார்கள். ஆனால், உண்மையில் அவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் இதைப் பேசியிருந்தார்.
கடந்த டிசம்பர் 13ம் தேதி எடுக்கப்பட்ட நேர்காணலில் தான் பிஷ்ட்டின் இந்த கருத்துகளைக் கூறியதாக சில நெட்டிசன்கள் கூறினர். ஆனால், அதில் உண்மை இல்லை. இது கடந்த டிசம்பர் மாதம் அவர் பேசியது. ஆனாலும், அவர் சொன்னது போலவே அரசு கவிழ்ந்துள்ளது.
நேபாளத்தில் கடந்த சில மாதங்களாகவே கொந்தளிப்பான சூழல் நிலவி வந்துள்ளது. வெளியுலகிற்குத் தெரியவில்லை என்றாலும் கூட நேபாளத்தில் பொருளாதார சூழல் தொடங்கிப் பல காரணங்களால் மக்கள் கொந்தளிப்பில் இருந்துள்ளனர்.
சமூக வலைத்தள தடை என்பது மக்கள் மொத்தமாக வீதிக்கு வர ஒரு புள்ளியாக அமைந்துவிட்டது என்றே சொல்லலாம். 8 மாதங்களுக்கு முன்பே தனது பழைய வீடியோவை பகிர்ந்த பிஷ்ட்டின் மேலும் கூறுகையில், “8 மாதங்களுக்கு முன்பே இதை நான் சொன்னேன்..
8 மாதங்கள் என்பது ஒரு நீண்ட காலக்கெடு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் ஒரு அரசைக் கவிழ்க்க இந்தளவுக்கு நேரம் எடுக்கும். நேபாள அரசு வெறும் 48 மணி நேரத்தில் கவிழ்ந்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா? உண்மை அது அல்ல..
அரசை கவிழ்க்க நீண்ட காலம் எடுக்கும்” எனக் கூறியிருக்கிறார். நேபாளத்தில் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி செவ்வாயன்று (செப்டம்பர் 9) மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து ராஜினாமா செய்துள்ளார். இதனால் நேபாளத்தில் குழப்பமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
சமூக வலைத்தள தடையைத் தொடர்ந்து வெடித்த இந்த போராட்டம் முதலில் தலைநகர் காத்மாண்டுவில் மிக மோசமாக இருந்தது. தொடர்ச்சியாக போக்ரா, பட்வால் மற்றும் பிர்ஹன்ஜ் என பல்வேறு நகரங்களுக்கும் போராட்டம் பரவின.
சத்தமில்லாமல் மன்னர் ஞானேந்திர ஷா போடும் கணக்கு! ஷாக் பின்னணி நேபாள மோதல் பின்னணி வரி மற்றும் இணைய பாதுகாப்பு பிரச்சனைகளைக் காரணம் சொல்லி நேபாள அரசு சமூக வலைத்தளங்களைத் தடை செய்தன.
Gen Z எனப்படும் 2K கிட்ஸ் தான் இந்த போராட்டத்தில் பெரியளவில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததால் சமூக வலைத்தள தடையை அந்நாட்டு அரசு விலக்கிக் கொண்டது. இருந்தாலும் போராட்டத்தைத் தொடர்ந்து மக்கள், ஷர்மா ஒலியை ராஜினாமா செய்ய வலியுறுத்தினர்.
நிலைமை மோசமானதால் ஷர்மா ஒலி மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அந்நாட்டு அரசு கவிழ்ந்தது. இந்த போராட்டம் பல இடங்களில் வன்முறையாக மாறியது. அமைச்சர் மற்றும் முக்கிய அதிகாரிகள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த மோதலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர்… 500 பேர் காயமடைந்தனர். நிலைமையை போலீசாரால் சமாளிக்க முடியாததால் களத்தில் இறங்கிய நேபாள ராணுவம், நாடு தழுவிய ஊரடங்கையும் அமல்படுத்தியது.





