நெருப்பாகும் முஸ்லிம் அரசியல்!

-யூனுஸ் என் யூசுப்-

டீல் அரசியல்வாதிகளுக்கு அழிவு

அரசியல் வியாபாரிகளுக்கு நடுக்கம்

கண்டி-டாக்டர் சாபி சிஹாப்தீன்
திகாமடுல்ல- சட்டத்தரணி ஹசனா இஸ்ஸதீன்
திருகோணமலை- சின்ன மஹ்ரூப்
கொழும்பு-டாக்டர் சாலி
தேசிய பட்டியல்-முனீர்

Did Maulavi Muneer Moulafar make a statement regarding NPP's manifesto? – Factseeker

2024 ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் சில மாவட்டங்களில் 40-50 வரையிலும் பெரும்பாலான மாவட்டங்களில் 30-40 வரையிலும் இன்னும் சில மாவட்டங்களில் 30-20 சதவீதம் என்ற அளவில் அனுர குமாரவுக்கு வாக்குகள் விழும் என்று நாம் தேர்தலுக்கு முன்னர் சொல்லி இருந்தோம் ஏறக்குறைய அது நடந்திருக்கின்றது.

வடக்குக் கிழக்கில் கூட NPP.க்கு பிரதிநிதித்துவம் உறுதியாகி இருக்கின்றது. இந்தப் பின்னணியில் வருகின்ற பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 140 ஆசனங்களை NPP. பெற்றுக் கொள்ளும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அதிரடியான அரசியல் மாற்றங்கள் நடந்து கொண்டிருப்பதை இப்போது எல்லா இடங்களிலும் அவதானிக்க முடிகின்றது.

NPP.தரப்பில் கண்டி-டாக்டர் சாபி சிஹாப்தீன். திகாமடுல்ல-சட்டத்தரணி ஹசனா இஸ்ஸதீன். திருகோணமலை-சின்ன மஹ்ரூப். கொழும்பு-டாக்டர் சாலி. போன்ற பிரபல்யங்களும் தேசிய பட்டியல்-முனீர் என்று தகவல்கள்.

ஆனாலும் என்பிபி-ஜேவிபி. வேட்பாளர் உரிமம் பெறுவது ஏனைய கட்சிகளிடமிருந்து பெற்றுக் கொள்வது போல் அல்ல. அதற்கு சில ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் விதி முறைகளும் இருக்கின்றன.

டாக்டர் சாபி-கண்டியில் இருந்து களமிறக்கப்படுவாராக இருந்தால் NPP.க்கு மேலும் பல்லாயிரக்கணக்கான புதிய வாக்குகள் வந்துசேரும். இதனை NPP-JVP தலைவர்களும் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவரை சமூகம் தமது சொந்த வீட்டுப் பிள்ளையாகத்தான் பார்க்கின்றார்கள்.

அவர் பெறும் வாக்கில் மேலும் ஒரு ஆசனம் கண்டியில் உறுதியாவதுடன் மாவட்டத்தில் போனஸ் ஆசனமும் NPP.க்கு நிச்சயமாகிவிடும்.

டாக்டர் சாபியை சந்தித்த சில முஸ்லிம் அரசியல் செயல்பாட்டாளர்களிடம் தான் கண்டியில் போட்டியிடுவதற்கான சம்மதத்தையும் அவர் தெரிவித்திருக்கின்றார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலையில் சின்ன மஹ்ரூப் 

இங்கு அவர் களமிறக்கப்பட்டால் அங்கும் NPP க்கு போனஸ் ஆசனம் நிச்சயம் என்ற நிலை. மஹ்ரூப் அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்தும் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர் என்ற தவிசாளர் பதவியில் இருந்தும் தனது இராஜினாமாவை நேற்று தலைவரிடம் கொடுத்திருக்கின்றார்.

மஹ்ரூப்புக்கு போனஸ் உறுப்பினரை வென்றெடுக்கும் MP. என்ற ஒரு சிறப்புப் பெயரும் மாவட்டத்தில் இருக்கின்றது. எனவே தமிழர்கள் தரப்பில் அருனும், முஸ்லிம்கள் தரப்பில் மஹ்ரூப்புக்கும் அங்கு அதிக வாய்ப்பு.

ஹசனா இஸ்ஸதீன் திகாமடுல்ல 

அதே போன்று முஸ்லிம் காங்கிரசின் இரண்டாம் நிலைத் தலைவராக இருந்த சட்டத்தரணி சேகு இஸ்ஸதீன் மகள் ஹசனா இஸ்ஸதீன் திகாமடுல்ல மாவட்டத்தில் இருந்து களமிறக்கப்படலாம்.

ஆளுமை மிக்க ஒரு தலைவரான இஸ்ஸதீன் மகள் ஹசனா அங்கு களமிறக்கப்பட்டால் ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுப் போன திகமடுல்ல மாவட்டத்தையும் 2024ல் என்பிபி. பொதுத் தேர்தலில் வெற்றி கொள்ள முடியும் என்பது நமது கணக்கு.

ஆளுமை மிக்க ஹசனா தற்போது பிரதமர் ஹரினியின் அந்தரங்கச் செயலாளராக பதவி வகிக்கின்றார்.

தேசிய பட்டியல்  முனீர்

முஸ்லிம்கள் மத்தியில் NPP.க்காக நெடுநாளாக உழைத்து வரும் முனீர் மௌலவிக்கு தேசிய பட்டியலுக்கு அதிக வாய்ப்பு.

இதுவரை முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றிப் பிழைத்துக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல் வியாபாரிகள்-டீல் அரசியல்வாதிகள் இன்று பெரும் களக்கம் அடைந்து வருகின்றனர்.

மு.கா. தலைவர் கொழும்பில் வசித்தாலும் அவர் அரசியல் வியாபாரம் செய்வது கண்டி மாவட்டத்தில். கண்டியில் பல இடங்களில் மு.கா. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாலர்கள் NPP.யுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து வருகின்றனர். இந்தக் காட்சிகள் இன்னும் சில நாட்களில் மேலும் துரிதமாகும்.

2024 பொதுத் தேர்தலில் முஸ்லிம்களின் இந்த மன மாற்றம் காரணமாக பத்துக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் NPP.யில் வெற்றி பெற இடமிருக்கின்றது.

ரணில் மற்றும் சஜித் பின்னால் ஓடித் திரிந்த சந்தர்ப்பவாதிகளும் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரை வரவேற்கும் வைபவங்களில் முகத்தை காட்சிப்படுத்துவதை இந்த நாட்களில் அவதானிக்க முடிகின்றது.

ஓ.. அவர்களுக்கும் இவர்கள் தானே இப்போது தலைவர்கள். ஓகே… ஓகே… வியாபாரத்துக்கு-டீலு க்கு மட்டும் இங்கே வாய்ப்பு இல்லை தெரிந்து கொண்டால் நல்லது.

Previous Story

ரணிலை ஏமாற்றி விட்டார்கள்!

Next Story

ஜனாதிபதி அநுர பணிப்புரைக்கு தேர்தல் ஆணைக்குழு தடை !