நெரிசலில் மரணித்த ஜினாத் கொரியரா!

-நஜீப் பின் கபூர்-

தென் கொரியாவில் ஹாலோவின் திருவிழாவில் நெரிசலுக்கு சிக்கி நூற்றுக் கணக்கானவர்கள் அகால மரணமானதும் மற்றும் நூறுவரையிலானவர்கள் காயப்பட்டதும் உலகலாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததும் அதில் இலங்கை இளைஞன் ஒருவர் மரணமானதும் தெரிந்ததே. மேற்கத்திய காலாச்சாரப் பின்னணியைக் கொண்ட இந்த ஹாலோவின்-பேய்ப் பார்ட்டி முஸ்லிம்களின் புனித பூமியான சவுதியிலும் இந்த முறை கொண்டாடியது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருந்தது. முஸ்லிம் உலகத்தார் இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானதையும் நாம் பார்த்தோம். அந்த விவகாரங்கள் அப்படி இருக்க இந்த ஜினாத் விவகாரத்தில் ஊடகக்காரன் என்றவகையில் நமக்குப் பல கேள்விகள் இருக்கின்றன.

இதில் பாதிக்கப்பட்ட குடும்பம் மிகவும் ஏழ்மையானது. மரணித்த ஜினாத்தான் அந்தக் குடும்பத்திற்கு மீட்பாளராவும் இருந்தாh.; மிக இளம் வயதுக் குடும்பக்hரர். மனைவிக்கு குழந்தையும் கிடைக்க இருக்கின்றது. மிகக் குறுகிய காலத்துக்குள்ளே அவர் உயிர் பறிபோய்விட்டது. இங்கு கட்டுரையில் நாம் எழுப்புகின்ற கேள்விகளுக்கும் அந்தக் குடும்பத்துக்கும் எந்தத் தொடர்புகளும் கிடையாது. அது ஒரு அப்பாவிக் குடும்பம்.

ஜீனாத் தயாயும் தந்தையும் நோயாளிகள்.  இந்த மரணத்தின் போது நடந்த நிகழ்வுகள் பற்றி ஊடகக்காரனின் கடமை பொறுப்பு சார்ந்த விடயத்தில் நமது இந்த விமர்சனமும் கேள்விகளும் அiமைகின்றன. ஜினாத் பிறப்பு கண்டி-உடதலவின்ன. அவர் ஒரு இலங்கையர். ஆனால் நிகழ்வுகளைப் பார்க்கும் போது நமக்கு அப்படித் தெரியவில்லை. இந்த சம்பவத்தின் போது தொழில் அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சும் தமது பொறுப்பு விவகாரத்தில் கடமைகளைச் செய்ததா என்ற கேள்வி இருக்கின்றது.

தமது பிரசை ஒருவர் வெளிநாடு ஒன்றில் மரணிக்கின்றபோது அவர் சார்ந்த விடயத்தில் அந்த நாட்டிலுள்ள தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சு தமது கடமைகளை மேற்கொள்வது வழக்கம். அது அவர்களது கடமையும் கூட. அந்த வகையில் இலங்கையர் ஒருவர் கொரிய சம்பவத்தில் மரணத்திருந்ததைக் கேள்விப்பட்ட போது அது பற்றி தேடிப் பார்ப்பது இலங்கை தூதுவராலயத்தலும் வெளிவிவகார அமைச்சரினதும் கடமை.

அதனால்தான் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஊடகங்களுக்கு இது பற்றி அவ்வப்போது சில தகவல்களை வெளியிட்டார். மரணித்வர் உடலை இங்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை கவனிக்குமாறு அங்குள்ள தூதுவரிடத்தில் கட்டளைகளையும் பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜினாத் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் எந்தளவுக்கு தொழில் பட்டிருக்கின்றது என்பது காரியாலய மட்டத்தில் அவர்களுக்கு மட்டும் தெரிந்த விடயமாக இருந்தாலும், இது தொடர்ப்பில் பல இடங்களில் தேடிப்பார்த்ததில் பெற்றுக் கொண்ட தகவல்களை நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். நெரிசலில் மரணமானவர் இதற்க முன்னரும் இரண்டு வருடங்கள் கொரியாவில் இருந்து விட்டு நாட்டுக்குத் தனது திருமணத்துக்காக வந்திருந்தார் என்பதும் அதன் பின்னர் இவர் கொரியாவுக்குப் போனதும் ஊடகங்களில் பாரவலாக சொல்லப்பட்ட செய்தி.

எந்த ஒரு நாட்டிலும் ஒரு அசம்பாவிதம் நடந்தால் அதில் தங்கள் பிரசைகள் இருக்கின்றாரர்களா என்று தேடிப்பார்ப்பது அரசாங்கத்தின் கடமை அதனைத்;தான் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி செய்திருக்க வேண்டும். அதே போன்று வெளி நாடு ஒன்றில் ஏதேனும் காரணங்களினால் மரணிக்கின்றவர் விடயத்தில் அந்த நாட்டில் இருக்கின்ற தூதுவராலயமும் ஈடுபட்டுத்தான் கடதாசிகளைத் தயாரித்து ஆக வேண்டும். எனவே அதனைத்தான் அரசாங்க மட்டத்தில் செய்திருகின்றார்கள்.

இலங்கைக்கு டொலர் தேவைப்படுகின்ற போது வெளிநாடுகளில் இருக்கின்ற இலங்கையரிடம் அதனை எப்படியாவது அரசு பிடுங்கி எடுப்பதற்கான முயற்சிகளைச் செய்து வருவதும் அதில் அழுத்தங்கள் கொடுத்து வருவதும் தெரிந்தே. ஒரு காலத்தில் புலம் பெயர் தமிழ் சமூகத்தை பயங்கரவாதிகள்-டயஸ்போராக்காரர்கள் துரோகிகள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள். இப்போது அவர்களிடம் தமக்கு உதவி வழங்குமாறு மன்றாடிக் கொண்டிருப்பதும் அதற்காக அவர்களுக்கு சலுகைகளைச் அரசு செய்து கொண்டிருப்தும் தெரிந்ததே. எனவே எதிரியிடம் கூட தேவைப்படும் போது மண்டியிட இலங்கை ஆட்சியாளர்கள் தயாராக இருக்கின்றார்கள். அதே போன்று மேற்க்கத்திய நாடுகளை புலிகளின் ஆதரவாலர்கள் என்று முத்திரை குத்தியவர்கள் இன்று அவர்களிடத்திலும் சரணடைந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஐஎம்எப் உலக வங்கி போன்றவற்றில் கூட நாம் மண்டியிட மாட்டோம் அவர்களுடைய பணம் எமக்குத் தேவையில்லை. அவர்கள் போடுகின்ற கட்டுப்பாடுகளையும் நாம் ஏற்க மாட்டோம் என்று சொன்னவர்கள் ஐயா உங்கள் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்கின்றோம். உங்களுடன் போடுகின்ற இரகசிய உடன்பாடுகளைக் கூட நாம் வெளியில் செல்லமாட்டோம். எப்போது நமக்கு உங்கள் காசு கிடைக்கிகும் என்று ஒவ்வொரு நாளும் இரவு பகலாக எதிர்பார்த்திருக்கின்றார்கள். ஆனால் இந்த நிமிடம் வரை நம்பிக்கையான சமிக்ஞைகள் எதனையும் காணோம்.  கொரியாவில் மரணித்த ஜினாத் கதைக்கும் இந்த  செய்திகளுக்கும் என்ன தொடர்புகள் என்று நீங்கள் யோசிக்கலாம். இவை இரண்டும் காசு-டொலருடன் சம்பந்தப்பட்ட விடயம்கள்.

ஜினாத் கொரிய நாட்டில் இருந்த நாட்களில் இலங்ககை;கு பணத்தை அனுப்பி இருக்கின்றார். தமது நோயாளிகளான பெற்றோருக்கும் உறவுகளுக்கும் உதவி இருக்கின்றார். ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவரே அந்தக் குடும்பத்தின் மீட்பாhளராகவும் செயல்பட்டு வந்திருக்கின்றார். இன்று அவர் அகல மரணம் அடைந்து விட்டதால் அவர் நாட்டுக்கு அனுப்பிய பணமும் குடுபத்தை பராமரித்த கடமைகளும் முற்றுப் பெற்றுவிட்டது.

இப்போது இதற்கு சம்பந்தமே இல்லாத இருபதற்க்கு இருபது கிரிக்கட் பற்றி சில செய்திகளைச் சுட்டிக் காட்ட நினைக்கின்றோம். கிரிக்கட் விளையாடப் போதான இடத்தில் கிரிக்கட் வீரர் தனுஷ்க குனத்திலக்க பெண் ஒருவருடன் பாலியல் சார்ச்சையில் சிக்கிய போது அனேகமான கிரிக்கட் அதிகாரிகளும் அரசும் சமூக ஊடகங்களும் அவரை புனிதப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. சட்டத்தரணிகள் ஊடாக தனுஷ்க இந்தக் குற்றச்சாட்டை ஏற்கக் கூடாது. என்றும் சொல்ப்பட்டதுடன் அவருக்காக கட்டுப்பாட்டுசபையின் சட்டத்தரணிகள் ஆஜராவதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது. மேலும் அவரது வழக்குக்குத் தேவையான பணமும் கட்டுப்பாட்டு சபையே பொருப்பேற்றுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

இத்தனைக்கும் தான் அந்தக் குற்றச் செயலை புரியவில்லை என்று இன்று வரை தனுஷ்க வெளிப்படுத்தவில்லை. அதே நேரம் படகொன்றில் ஏறிப்போய்தான் அவர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டார்.இது கிரிக்கட் விதிகளுக்க எப்படி ஏற்புடையது. நூட்டில் ஆட்சியாளர்கள் தமக்கு வேண்டிய குற்றவாளிகளை குறுக்குவளிகளில் விடுதலை செய்து கொள்வது போலத்தான் இதுவும் இருக்கின்றது. இதற்கு முன்னரும் தனுஷ்க கட்டுப்பாட்டு சபையின் விதி முறைகளை மீறி பல சந்தர்ப்பங்களில் தண்டிக்கப்பட்டிருக்கின்றார் என்பதும் பதிவுகளில் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒருவருக்கே கோடிக் கணக்கில் அரசும் கட்டுப்பாட்டுச் சபையும் பணம் செலவு செய்யத் தயாராக இருக்கின்றது. அப்படி இருக்கின்ற போது நாட்டுக்காக டொலர் சம்பாதிக்கப் போன இடத்தில் விபத்தில் மரணமான ஜினாத் விவகாரத்தில் அரசின் பங்களிப்பு என்ன என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம். இதற்காக அந்தக் குடும்பத்தக்கு இதுவரை என்ன பண்ணி இருக்கின்றது?

இப்போது மீண்டும் ஜினாத் விடயத்துக்கு வருவோம். அங்கு அகால மரணமானவர் உடல் இலங்கைக்கு இவ்வளவு விரைவாக கொண்டு வரப்பட்டதற்கு அச்சானியா இருந்து செயல்பட்டவர்கள் கொரியாவிலுள்ள இலங்கை வாழ் முஸ்லிம் இளைஞர்களின் அமைப்பே முன்னின்று மேற்கொண்டது. இதிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த செய்தி என்ன வென்றால் அந்த அமைப்பிலுள்ளவர்கள் பல பக்கமாகப் பிரிந்து நின்று துரிதமாக செயல்பட்டு அவரது ஜனாசாவை-உடலைப் பொறுப் பேற்று அதற்கன அனைத்துக் கடமைகளையும் செய்து மிக விரைவாக இங்கைக்கும் அனுப்பி வைத்து விட்டார்கள்.  இறந்தவர் உடலை இங்கு அனுப்பி வைப்பதற்கு அவர்கள்  முப்பத்தி ஐந்து முதல் முப்பத்தி ஏழு இலட்சம் ரூபாய்கள் (35-37) வரை செலவு செய்திருகின்றார்கள். இது உமர் பாருக் நிதியத்தை மையப்படுத்திய இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் பணம்.

இதற்காக நாடும் அந்தக் குடும்பமும் உறவுகளும் கொரியாவில்  இயங்கும் அந்த இலங்கையர் அமைப்புக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது. அதே நேரம் குறித்த சம்பவத்திற்கு இரு நாட்கள் பின்னர் கொரியாவுக்குப் போய் அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த 34 வயது இளைஞன் ஒருவரும் கடலில் வீழ்ந்து மரணமானார். அவர் இலங்கையில் இருக்கம் போது வங்கி முகாமையாளராக தொழில் பார்த்தவர். அவரது சடலம் இன்று வரை இங்கு எடுத்து வரப்படவில்லை. இதிலிருந்து குறிப்பிட்ட கொரியா வாழ் முஸ்லிம் அமைப்பு எந்தளவு செயல்திறன் மிக்க அமைப்பாக இயங்குகின்றது என்பதனை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.

சம்பவம் அக்தோபர் 29ம் திகதி நடந்திருக்கின்றது. 30ம் திகதி இவரது மரணம் குடும்பத்துக்குத் தெரிய வந்திருக்கின்றது. ஜனாசா-சடலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சொன்படி நவம்பர் 3ம் திகதி சரியாக அதிகாலை 4.30 மணிக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது. அதன் பின்னர் நீர் கொழும்பு வைத்தியசாலைக்கு பரிசோனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட உடல் 12 மணி நேரத்துக்குப் பின்னர் அன்று அதாவது மூன்றாம் திகதி மாலை 4.30 மணிக்கு உறவினர்களுக்குக் கையளிக்கப்படுகின்றது.

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மரணம் பரிசோதனைகள் தாமதம் அடைந்ததற்கான காரணம் மரணம் தொடர்பான வைத்திய அதிகாரியின் தாமதம் அல்லது அதில் அவர் தெளிவில்லாத நிலையில் இருந்தார் என்றும் கதைகள் இருக்கின்றன. (இது விடயத்தில் கூட வெளிவிவகார அமைச்சு நவீன தொழிநுட்பத்தைப் பாவித்து கொரியாவைத் தொடர்பு கொண்டு சில மணி நேரத்துக்குள் ஒரு தீர்வைப் இதில் பெற்றிருக்க முடியும்.) அதன் பின்னர் வீட்டுக்கு எடுத்து வரப்பட்ட ஜனாசா-உடல் இரவு எட்டு மணிக்கு கண்டி-கலதெனிய தாய்ப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்டடிருக்கின்றது.

இலங்கைக்கான கொழும்பில் இருக்கும் கொரியத் தூதுவர் சந்தூஷ் வூன்ஜின் ஜியொங் 4ம் திகதியே குறித்த ஜனாத் வீட்டிற்கு வந்து நேரே பெற்றோரையும் சந்தித்து அறுதலும் செல்லி அவர்களது தேவைகளையும் கேட்டறிந்து விட்டு வந்திருக்கின்றார். இதற்காக அவர் அதிகாலையில் கொழும்மபில் இருந்து புறப்பட்டிருக்க வேண்டும். ஜினாத் விடயத்தில் கொரிய அரசு எடுத்துக் கொண்ட ஆர்வத்தைத்தான் இது காட்டுகின்றது.  பாதிக்பட்ட குடும்பத்துக்கு இது பெரும் மன நிறைவைக் கொடுத்திருக்கக் கூடும். அத்துடன் ஜினாத் உடல் விமான நிலையம் வந்த போதும் கொரியத் தூதுவராலயத்திலுள்ள செயலாளர் அதிகாலை விமான நிலையம் போய் தேவையான ஏற்பாடுகளை ஜினாத் உறவுகளுடன் இணைந்து கவனித்திருக்கின்றார்.மரண பரிசோனை தாமத்துக்கும் அவருக்கும் கொரிய இராஜதந்திரிகளுக்கும் எந்தத் தொடர்புகளும் கிடையாது. இது முற்றிலும் இலங்கையின் உள்நாட்டு விவகாரம்.

இதிலுள்ள மிகவும் வேதனையான மேலும் சில பக்கங்களை இப்போது பார்ப்போம். ஆனால் கட்டுரையை எழுதும் இந்த நேரம் வரை குறிப்பிட்ட ஜினாத் விடயத்தில் டொலருக்காக இளைஞர்களை அனுப்பி பண வேட்டையில் ஈடுபடும் அரசு எதையாவது செய்திருக்கின்றதா என்று கேட்கின்றோம். குறிப்பிட்ட இளைஞர் அமைப்பு அங்கு துடிப்புடன் இயங்கி இருக்க விட்டால் இன்று வரை ஜினாத் உடல் இங்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் சில அரச முகவர்கள் எல்லாம் அரசுதான் பார்த்தது என்று நமக்கு கதை சொல்ல வருகின்றார்கள். அந்தக் கதையில் உண்மை இல்லை.

4ம் திகதி கொரியத் தூதுவர் ஜினாத் வீட்டுக்கு வந்த போது அவருக்குப் பொலிஸ் பாதுகாப்புக் கொடுக்கபட்டிருக்கின்றது. அப்போது கொரியத் தூதுவருடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவர்களின் பொதுசனத் தொடர்பு அதிகாரி வசீர் முக்தார் கலந்து கொண்டதாக சில ஊடகக் குறிப்பில் சொல்லப்பட்டிருந்தது. இது தொடர்பாக நாம் வெளிவிவகார அமைச்சில் தேடிப் பார்த்ததில் அப்படியானதொரு பொதுசனத் தொடர்பு அதிகாரியே அங்கு இல்லை என்று தெரிவந்தது. பின்னர் குறிட்ட அன்;பரிடமே நாம் இது பற்றி நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட விசாரித்தபோது தனக்கு அப்படியான எந்தப் பதவியும் அலி சப்ரியின் வெளிவிவகார அiமைச்சில் இல்லை. இது பற்றி தன்னிடம் ஊடகத்துறையினர் விசாரிக்காமல்தான் செய்தியை எழுதி இருக்கின்றார் என்றும் இந்தப் பதவி தொடர்பில் தனது மறுப்பையும் நமக்குப் பதிவு செய்தார்.

இல்லாத பதவிகளை வைத்து அரசியல்வாதிகளின் பின்ன ஓடித்தரிபவர் நாட்டில் செய்கின்ற அட்டகாசங்கள் நமது நாட்டு  மக்கள் அறிவார்கள். இது விடயத்தில் மேலும் தேடிப் பார்த்த போது குறிப்பட்ட முக்கதார் என்றவர் ஆளும் தரப்புடன் நெருக்கமானவர். அந்த வகையில் அவர் சமூக நலன்கள் சார்ந்த விடயங்களில் தேவைகளைத் தேடிப்பார்ப்பவர் என்றும் தெரிய வந்தது. அதற்காக அவரைப் பாராட்டலாம்.  அவரை சப்ரி அரசின் சார்பில் உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்தார் என்பதற்கான எந்த ஆதாரமுத் இல்லை. அதற்காக அவர் வெளிவிவகார அமைச்சரின் முகவராக வந்தார் என்பது பிழையான தகவல். அரசு சார்பில் ஒரு எறும்புகூட இன்றுவரை அந்த வீட்டுக்கப் போகவில்லை என்பதே உண்மை.

இதிலிருந்து நாம் எதனைச் சொல்ல வருகின்றோம் என்றால் இன்று வரை மரணித்த ஜினாத்தின் குடும்பம் பற்றிய எந்த ஆறுதல்களையோ தொடர்புகளையோ அரசாங்கம் உத்தியோகபூவமாக மேற்கொள்ளவில்லை. எனவே அந்த ஒரு தனி ஜீவனை நம்பி வாழ்ந்த குடும்பத்துக்கு இதன் பின்னராவது அரசு தனது பணிகளைச் செய்ய வேண்டும். டொலர் வேட்டைக்கு மட்டும் இளைஞர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றும் அரசாங்கம் இது விடயத்தில் தனது கடமையைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். ஒரு ஊடகக்காரன் என்று வகையில் இந்த தகவல்களை நாட்டுக்குத் தெரியப்படுத்த வேண்டி இருக்கின்றது. இப்படியான ஒரு நேரத்தில் பாதிக்கபட்டவர்கள் விடயத்தில் அரசு தனது பொறுப்புக்களைச் செய்ய வேண்டும்.

ஒரு தேர்தல் நேரத்தில் இப்படி நடந்திருந்தால் அனைத்து அரசியல்வாதிகளும் ஜினாத் வீட்டில் முழுநாளும் முகாமிட்டிருப்பார்கள். அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். மு.கா. ஹக்கீம் ஜினாத் வீட்டிக்கு நேரடியாக வந்திருந்தார். அதற்கான பின்னணிகள் முற்றிலும் வேறானது. அதனை நாம் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. அதே போன்று பிரதேசத்தில் நடக்கின்ற அனைத்து மக்களின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்ளும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் லாபீர் ஹாஜியர் நேரடியாகவே அடக்கஸ்தளம் வரை போய் தனது  அனுதபங்களை அங்கு தெரிவித்திருந்தார்.

குறைந்தது மத்திய மாகாண ஆளுநர் அல்லது அரசாங்க அதிபரவது இந்த நிகழ்வில் அரசு சார்ப்பில் பங்கேற்றி இருக்க வேண்டும். என்பது ஜினாத் விடயத்தில் கட்டுரையாளன் பார்வையாக இருக்கின்றது எனவேதான் ஜினாத் கொரியப் பிரசையா இலங்கைப் பிரசையா என்று நாம் இங்கு கேள்வி எழுப்பி இருக்கின்றோம்.

இது பற்றி நாடாளுமன்றத்திலும் இதுவரை எவரும் கேள்வி எழுப்பவில்லை அல்லது இது பற்றிய உண்மைத் தன்மைகளை அவர்கள் இன்றுவரை தெரிந்திருக்கவில்லை என்று எண்ண வேண்டி இருக்கின்றது.

நன்றி:13.11.2022 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்! பின்னணி

Next Story

பாலியல்: தனுஷ்கவை காப்பாற்றும் முயற்சியில் பிரபல வீரர்