நூற்றாண்டுக்கான மக்கள் பேரவை நிலைப்பாடு

சகோதரர்-சகோதரி

……………………………………………………………………… அவர்கட்கு
அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு ‘நூற்றாண்டுக்கு நூறு நிகழ்ச்சிகள் தேசத்துக்கோர் நூற்றாண்டுக் காட்சிகள்’ என்ற தொனிப் பொருளில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தொடர்பில் நாம் நேரில் வந்து தாங்களைச் சந்தித்துக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதும் நினைவில் இருக்கும்.

என்றாலும் நாம் கல்லூரி நிகழ்ச்சிகளுக்குப் புறம்பாக தனியாக நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது தொடர்பில் சாதகமாகவும் பாதகமாகவும் விமர்சனங்கள்-கருத்துக்கள் ஏற்பட்டிருந்தது தெரிந்ததே.

இந்த முரண்பாடுகளை கலைந்து கொள்வதற்காகவும் இரு தரப்பும் இணைந்து ஓரே நிகழ்ச்சியாக இதனை ஏற்பாடு செய்வது தொடர்பாகவும் கல்லூரி நிருவாகத்துடன் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டோம். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்பது எமது நிலைப்பாடாகும்.

இந்தப் பின்னணியில் முரண்பாடுகளைத் தவிர்த்துக் கொள்வதற்காக தற்போது கல்லூரி நூற்றாண்டு நிகழ்வுகள் முற்றுப் பெறும் வரை எமது 100 நிகழ்ச்சிகள் தொடர்பான ஏற்பாடுகளை நாம் தற்காலிகமாக இடை நிறுத்தி வைத்திருக்கின்றோம்.

இதற்காக இது வரை நீங்கள் எமக்கு வழங்கிய மேலான ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன்இ கல்லூரி நிகழ்வுகள் முற்றுப் பெற்றதும் எமது நிகழ்ச்சிகள் திட்டமிட்டவாறு முன்னனெடுக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.

இந்த ஏற்பாடுகளில் நாம் தாங்களுக்கு பொறுப்பான பதவிகளைக் கையளிக்க திட்டமிட்டிருந்தோம். அந்நியமனங்கள் எதிர்காலத்தில் தாங்களுக்குக் கையளிக்கப்பட இருக்கின்றது என்பதனையும் அறியத் தருகின்றோம்.

அத்தோடு எமது கல்லூரியின் நூற்றாண்டு தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவு பெற்ற பின்னர் இப்பேரவை மக்கள் பேரவை என்ற பெயரில் பிரதேசத்தின் (வத்தேகெதரஇ கலதெனியஇ மடிகே உடதலவின்ன) நலன்கள் தொடர்பாக கவனம் செலுத்த இருக்கின்றது.

அந்த சிவில் அமைப்பிலும் பொறுப்பான பதவிகளை ஏற்று நீங்கள் எம்முடன் தொடர்ந்தும் ஒத்துழைக்க வேண்டும் என்று நாம் தாங்களை நேசத்துடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மிக்க நன்றி
இப்படிக்கு நேசத்துடன்

செயலாளர்
ஏ.ஜே.எம்.நௌபர்

தலைவர்
ஏ.ஆர்.ஏ.பரில்

Previous Story

இனப்பெருக்கம் ரோபோட் விஞ்ஞானிகள் சாதனை!

Next Story

வாகனம் கையளிப்பு