நீருக்கடியில் போகும் விளக்கு!

-நஜீப்-

தற்போதய அரசாங்கம் சண்டைக்குள் சமாதான வாழ்வு என்ற நியதிப்படிப் போய்க் கொண்டிருக்கின்றது. அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியை விரட்டி, அந்த இடத்துக்கு மக்களால் துரத்தப்பட்ட ஒருவரை நிறைவேற்று அதிகாரம் மிக்க பதவியில் அமர்த்தி அழகு பார்க்கின்றது நாடு. அவர் கட்சிக்கு ஒரு ஆசனம்.! மொட்டுக் கட்சிக்கு 125 வரையிலான உறுப்பினர்கள்.

ராஜபக்ஸாக்கள் விரட்டப்பட்ட பின்னர் வந்த அமைச்சரவையில் நடுத்தர வயதுக்காரர்களே பதவிகளைப் பெற்றனர். இதனால் மொட்டுக் கட்சியில் இருக்கின்ற சிரேஸ்டமானவர்களும்  முக்கியஸ்தர்களும் பின்வரிசை உறுப்பினர்களானார்கள். அதே நேரம் ஜனாதிபதி ரணிலுக்கு நெருக்கமான ஐதேக.வினர் பலர் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டு இன்று மொட்டு அரசில் அவர்கள் மேலாதிக்கம் காணப்படுகின்றது.

அத்தோடு அமைச்சுக் கோட்டு ஜனாதிபதி ரணிலுடன் மொட்டுக் கட்சி உறுப்பினர் சண்டை போட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் எமது வாக்குகளால் அதிகாரத்துக்கு வந்திருக்கும் ஐதேக. அளவு மீறி துள்ளக் கூடாது என புத்தளத்து நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த நிசந்த  ரணிலை பகிரங்கமாக எச்சரித்திருக்கின்றார்.

இந்நிலையில் சண்டைக்குள் சமாதான விளக்கை பெரியவர் மஹிந்த நீருக்கடியில்  வெற்றியுடன் நகர்த்துவதால் அவர்கள் பயணம் இதுவரை தொடர்கின்றது.

நன்றி: 18.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஈரானிடம் 10 அணு குண்டுகள்!

Next Story

'பாலஸ்தீன்' சீன அதிரடி!